நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இறக்குமதி பொருட்களின் விலைகள் 3 முதல் 10% வரை உயரக்கூடும்: மைடின் உரிமையாளர்

கோலாலம்பூர்:

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் விநியோக நாடுகளில் ஏற்படும் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால், வரும் மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை 3% முதல் 10% வரை உயரக்கூடும்.

இறக்குமதியாளர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மைடின் வர்த்தக குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ வீரா அமீர் அலி மைடின் இதனை கூறினார்.

இந்த விலை உயர்வின் தாக்கம் மே அல்லது ஜூன் மாத தொடக்கத்திலேயே உணரப்படும்.

ஆனால், விலை உயர்வு எவ்வளவு இருக்கும், எப்போது இருக்கும் என்பதை இதுவரை எங்கள் விநியோகஸ்தர்கள் அறிவிக்கவில்லை.

இந்த விலை உயர்வு 5% அல்லது 10%க்குக் குறையாது. 20% வரை செல்லாது என்றும் நான் நினைக்கிறேன்.

ஒருவேளை 3% முதல் 10% வரை இருக்கலாம். அதனால் விலை மிகவும் அதிகமாக இல்லை என்று அவர் கூறினார்.

சீனா, இந்தியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் உள்ள விநியோகஸ்தர்களிடமிருந்து மலேசியா அடிப்படைப் பொருட்களை இறக்குமதி செய்கிறது.

அந்த நாடுகள் தற்போது எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன என்பதும் மக்களுக்குத் தெரியும் என்று அமீர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset