நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மகிழ்ச்சியில் திளைக்கும் மலேசிய நகரங்கள் எவை தெரியுமா?

புத்ராஜெயா: 

ஜொகூரில் உள்ள சிம்பாங் ரெங்காம், குளுவாங், மெர்சிங் நகரங்களும், கிளாந்தானில் உள்ள டாபோங் நகரமும், பகாங்கில் உள்ள லிப்பிஸ், ராவுப் நகரங்களும் 2026 ஆம் ஆண்டிற்கான மகிழ்ச்சியான நகர விருதைப் பெற்ற 10 நகரங்களில் அடங்குகின்றன.

கோலாலா திரங்கானு நகரம், திரங்கானுவில் உள்ள மாராங், பெர்மாய்சூரி நகரங்கள், சபாவில் உள்ள ரானாவ் நகரமும் பட்டியலில் இடம்பெற்றன. இந்த விருதுகளை வீட்டுவசதி, உள்ளாட்சி அமைச்சர் ந்கா கோர் மிங் வழங்கினார்.

மலேசிய நகர மகிழ்ச்சி நிலை அளவீடானது, மலேசிய புள்ளியியல் துறையால் (டி.ஓ.எஸ்.எம்.) செயல்படுத்தப்பட்ட மலேசிய மக்களின் மகிழ்ச்சிக் குறியீட்டுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்று ந்கா கூறினார்.

"இது நகர மகிழ்ச்சியின் மதிப்பீட்டை மிகவும் விரிவானதும் சமநிலையானதுமாக உறுதி செய்கிறது. அதாவது, டி.ஓ.எஸ்.எம்.-இன் அளவீடானது தேசிய, மாநில, மாவட்ட ரீதியாக மக்களின் நல்வாழ்வின் ஒட்டுமொத்த சித்திரத்தைப் பிரதிபலிக்கிறது.

"MURNInets-இன் அளவீடு, சுற்றுச்சூழலின் தரம், நகர சேவைகள் குறித்த குடியிருப்பாளர்களின் உண்மையான அனுபவத்தைக் கருத்தில் கொண்டு பகுப்பாய்வை நிறைவு செய்கிறது" என்று இன்று இங்கு நடைபெற்ற தேசிய மட்ட உலக மகிழ்ச்சி தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.

MURNInets என்பது, ஒரு உள்ளூர் அதிகார எல்லையின் (PBT) நிலைத்தன்மையை, நிர்ணயிக்கப்பட்ட நகர குறிகாட்டிகளின் ஒரு தொகுப்பின் மூலம் அளவிடுவதற்கும் மதிப்பிடுவதற்குமான ஒரு அமைப்பாகும்.

கடந்த மார்ச் 19 ஆம் தேதி வெளியிடப்பட்ட Ipsos மகிழ்ச்சிக் குறியீட்டு அறிக்கை 2026-ன் படி, மலேசியாவில், தெரிவிக்கப்பட்ட மகிழ்ச்சியின் நிலை, உலகளாவிய சராசரியை விட அதிகமாக இருந்ததாக ந்கா கூறினார். அதாவது, 2025 ஆம் ஆண்டில் 76 சதவீதமாக இருந்த நிலையில், 81 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

"இதன் பொருள், மக்களை நல்வாழ்வாக்கும் மடானி அரசாங்கத்தின் கொள்கைகள் இப்போது பலனைத் தரத் தொடங்கியுள்ளன. உலகளாவிய மட்டத்தில் ஏற்படும் எல்லா நிகழ்வுகள், குழப்பங்கள்  அமைதியின்மைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக, நாங்கள் மடானியின் பாதுகாப்பைத் தொடர்ந்து மேம்படுத்துவோம்" என்று அவர் கூறினார்.

மக்களின் நல்வாழ்வை வலுப்படுத்தும் முயற்சிகளுடன் ஒட்டி, மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கான நான்கு எளிய கொள்கைகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.  ஒவ்வொரு நாளும் ஒருவரிடம் உள்ளவற்றில் கவனம் செலுத்தி, போதுமான உணர்வை வளர்த்து, வாழ்க்கையில் சிறிய விஷயங்களைப் பாராட்டி, நன்றி செலுத்தும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.

"மேலும், நாம் நேர்மறையாகவும் இருக்க வேண்டும், எதிர்மறை கூறுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும், சீரான உணவு, உடல் செயல்பாடு, போதுமான ஓய்வு மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்" என்று அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset