செய்திகள் மலேசியா
தகவல் தொழில்நுட்ப உபகரண விநியோகத்தில் ஊழல்: அரசு பெண் அதிகாரி கைது
கோலாலம்பூர்:
ஒரு தகவல் தொழில்நுட்ப (ஐ.சி.டி.) உபகரண விநியோக நிறுவனத்திடமிருந்து, தனது பணியிடத்திலுள்ள தகவல் தொழில்நுட்பக் கிளைக்கான ஐ.சி.டி. உதிரி பாகங்கள், மென்பொருள் விநியோகத்தை அங்கீகரிப்பதற்காக, சுமார் RM7,000 இலஞ்சத்தைப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு அரசு ஊழியர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்.) மனு செய்ததைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் சிந்தியா நூர் ஹைசேன் சுலைமான், சந்தேக நபருக்கு இந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தடுப்பு காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.
40 வயதைக் கடந்த அந்தப் பெண், நேற்று மதியம் 3 மணியளவில் சிலாங்கூர் எஸ்.பி.ஆர்.எம். அலுவலகத்தில் சாட்சியம் அளிப்பதற்காக ஆஜரானபோது கைது செய்யப்பட்டார்.
"ஆரம்பக்கட்ட விசாரணையில், 2023 முதல் 2024 ஆம் ஆண்டு வரை சந்தேக நபர் அந்தச் செயலைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படுவதைக் கண்டறிந்தோம்.
"சந்தேக நபர், தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றும் பரிவர்த்தனை மூலம் இலஞ்சப் பணத்தைப் பெற்றதாக நம்பப்படுகிறது" என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து தொடர்பு கொண்டபோது சிலாங்கூர் எஸ்.பி.ஆர்.எம். இயக்குநர் முஹம்மத் அஸ்வான் ரம்லி, கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
இந்த வழக்கு எஸ்.பி.ஆர்.எம். சட்டம் 2009-ன் பிரிவு 17(a) கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 7, 2026, 5:47 pm
மகிழ்ச்சியில் திளைக்கும் மலேசிய நகரங்கள் எவை தெரியுமா?
April 7, 2026, 5:28 pm
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க மலேசியாவின் மேலும் ஆறு கப்பல்களுக்கு அனுமதி: ஈரான் தூதர்
April 7, 2026, 5:14 pm
மலேசியாவில் ஜூன் வரை தடையின்றி எரிசக்தி கிடைக்கும்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதி
April 7, 2026, 4:41 pm
நான்தான் மாமன்னரின் குரு: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பெண் மீது வழக்கு
April 7, 2026, 4:17 pm
