நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உதயகுமார் மரணம்; ஏழை குடும்பம் என அலட்சியம் கொள்ளாமல் போலிஸ் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்: பூபாலன்

பத்துகேவ்ஸ்:

உதயகுமார் மரணம் விவகாரத்தில் ஏழை குடும்பம் என அலட்சியம் கொள்ளாமல் போலிஸ் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

பாங்கி சட்டமன்ற உறுப்பினரின் இந்தியர் பிரிவு சிறப்பு அதிகாரி பூபாலன் இதனை கூறினார்.

பள்ளி வேன் ஏறி 7 வயது சிறுவன் உதயகுமார் துடிதுடித்து மரணமடைந்தான்.

குறிப்பாக தந்தையின் கண் முன்னே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தான் மிகப் பெரிய துயரம்.

சிறுவன் உதயகுமார் மரணமடைந்த நிலையில் சம்பந்தப்பட்ட வேன் ஓட்டுநர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சம்பந்தப்பட்ட வேனை சொந்தமாக கொண்ட அறவாரியத்தின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழர் முன்னேற்ற கழகத்தினர் இவ்விவகாரத்தை ஊடகத்தில் வெளியாக்கினர்.

அதே வேளையில் 9க்கும் மேற்பட்ட போலிஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஆக சம்பந்தப்பட்ட வேன் ஓட்டுநர், அறவாரியம் மீது போலிஸ் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இது தான் எங்களின் கோரிக்கை என்று பூபாலன் கூறினார்.

இதனிடையே மரணமடைந்த சிறுவன் உயயகுமார் வீட்டிற்கு இன்று கோம்பாக் பாஸ் கட்சியினர், கட்சியின் முஸ்லிம் அல்லாதவர்கள் ஆதரவு பேரவையின் பொறுப்பாளர்கள் வருகை தந்தனர்.

உதயகுமாரின் பெற்றோரை சந்தித்ததுடன் அவர்களுக்கு உதவியையும் வழங்கினர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset