செய்திகள் இந்தியா
குடகு மலையில் மாயமான கேரள வாலிபர்: 6 நாட்களாகத் தொடரும் தீவிரத் தேடுதல்
மடிக்கேரி:
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் மலையேற்றத்திற்குச் சென்ற, கேரளாவைச் சேர்ந்த பெண் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எர்ணாகுளத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஷரண்யா என்ற அந்தப் பெண்னைத் தேடும் பணிகள் கடந்த ஆறு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த போதிலும், இதுவரை எந்தத் தடயமும் கிடைக்காமல் தேடுதல் குழுவினர் திணறி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஷரண்யா திடீரென மாயமானார். அடர்ந்த காடுகள், செங்குத்தான மலைப்பகுதிகள் நிறைந்த இப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாகத் தேடுதல் பணியில் தடை ஏற்பட்டுள்ளது.
வனத்துறையினர், காவல்துறையினர், உள்ளூர் வாசிகள் எனப் பல குழுக்களாகப் பிரிந்து ஷரண்யாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தேடுதல் பணியின் ஒரு பகுதியாக டிரோன் கேமராக்கள், மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அப் பகுதியில் பெய்து வரும் கனமழை, அடர் மூடுபனி காரணமாகத் தேடுதல் குழுவினரால் முன்னேற முடியாமல் உள்ளது.
ஷரண்யாவின் கைப்பேசி அணைக்கப்பட்டுள்ளதால், அவரது இருப்பிடத்தைக் கண்டறிவதில் தொழில்நுட்ப ரீதியாகவும் சிக்கல் நீடிக்கிறது.
ஷரண்யாவின் குடும்பத்தினர், நண்பர்கள் மடிக்கேரியில் முகாமிட்டு மீட்புப் பணிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். கேரள அரசும் கர்நாடக அதிகாரிகளுடன் இணைந்து இந்தத் தேடுதல் பணிகளைத் துரிதப்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளது.
மாயமான ஷரண்யா உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
