செய்திகள் இந்தியா
மகாராஷ்டிராவில் ரவுடிகள் அட்டகாசம்: 15 நிமிடங்களில் 3 உயிர்கள் பறிப்பு
சத்ரபதி சம்பாஜிநகர்:
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஒருவரை வெட்டியது உட்பட மொத்தம் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில், ஒரு வணிக வளாகத்திற்கு அருகில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சாய் லாலா, அரிஜித் சிங் தலைமையிலான இரு எதிரெதிர் கும்பல்கள், கத்திகள், வாள்களுடன் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் அரிஜித் சிங், முஹம்மத் அற்பாஸ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இந்த மோதலில் பலத்த காயமடைந்த சையத் அவேஸ் என்பவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நிலைமை இன்னும் மோசமாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த அவேஸை, உயிரிழந்த அரிஜித்தின் சகோதரர் பிரதீப், அவரது கூட்டாளிகள் மருத்துவமனைக்குள்ளேயே புகுந்து மீண்டும் கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.
மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே நடந்த இந்தத் துணிகரக் கொலைச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கும்பல் மோதல் தொடர்பாக இதுவரை 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்கள், தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அபினாஷ் குமார் தெரிவித்துள்ளார். தற்போது மருத்துவமனை மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
