செய்திகள் இந்தியா
விமானத்தில் பரபரப்பு: அவசரக் கதவைத் திறக்க முயன்ற பயணி
புது டெல்லி:
பெங்களூரிலிருந்து வாரணாசிக்கு சென்ற இண்டிகோ விமானத்தில், விமானம் லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட தரையிறங்கும் தருவாயில், பயணி ஒருவர், அவசரகாலக் கதவைத் திறக்க முயன்றதால், மார்ச் 30, 2026 காலையில் அச்சுறுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அந்தப் பயணி அவசரகாலக் கதவை நெருங்கி அதைத் திறக்க முயன்றபோது மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்தச் சம்பவத்தைக் கண்ட விமானப் பணிப்பெண்கள், உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தினர். அதே நேரத்தில், விமானி விமானத்தை மீண்டும் மேலே உயர்த்தி, சிறிது நேரத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார்.
விசாரணையின் போது, தனக்குப் பேய் பிடித்திருப்பதாக அவர் கூறினார். மேலும், விமானப் பயணத்தின் போது விமானத்தின் கதவைத் திறக்க முடியாது என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.
பின்னர் அவர் விமானப் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையிடம் (CISF) ஒப்படைக்கப்பட்டார்.
மற்ற பயணிகளின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவித்ததாக இந்திய நீதித்துறைச் சட்டத்தின் பிரிவு 125-ன் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்புப் படை , உளவுப் பணியகம் உள்ளிட்ட அதிகாரிகளும் அந்தப் பயணியை விசாரணை செய்தனர், மேலும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அவர் உத்தரப் பிரதேச மாநிலம், மாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் அவர் கோவாவிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
