செய்திகள் மலேசியா
எண்ணெய் விலை விவகாரத்தில் சில அறிவற்றவர்கள் அரசாங்கத்தின் மீது பழி சுமத்துகிறார்கள்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
எண்ணெய் விலை விவகாரத்தில் சில அறிவற்றவர்கள் அரசாங்கத்தின் மீது வீண் பழி சுமத்துகிறார்கள்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
சில்லறை எரிபொருள் விலை உயர்வுக்கு அரசாங்கத்தைக் குற்றம் சாட்டும் சில தரப்பினர் அறிவற்றவர்கள்.
மேலும் உலக நிகழ்வுகளை அறியாத ஒரு குழு.
சம்பந்தப்பட்ட தரப்பினர் நடந்த அனைத்தையும் அரசியல்மயமாக்க விரும்புகின்றனர்.
இதனால் இந்தப் பிரச்சினை மேலும் மோசமடைந்தது.
வெளியே அவ்வளவு புத்திசாலித்தனம் இல்லாத சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எங்கள் அதாவது அரசு மீது பழி போடுகிறார்கள்.
நீங்கள் எங்கள் மீது பழி போட முடியாது. நீங்கள் புத்தகங்கள் படிப்பதில்லையா? நீங்கள் செய்திகளைப் பின்தொடர்வதில்லையா?
உலகில் என்ன நடக்கிறது என்பது கூட உங்களுக்குத் தெரியாதா என்று பிரதமர் கேள்வி எழுப்பினார்.
தெற்கில் ஹோர்முஸ் ஜலசந்தியில் கட்டுப்பாடுகள் இருப்பது உங்களுக்குத் தெரியாதா? இதுதான் பிரச்சனை என்று தெரியாதா?.
இந்த நாட்டில் எல்லாமே அரசியல்மயமாக்கப்படுகிறது என்று அவர் கடுமையாக சாடினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2026, 1:41 pm
உணவுப் பொருட்களின் சரக்கு போதுமானதாக உள்ளது; விலை உயராது: அமைச்சர்
April 4, 2026, 1:40 pm
எரிசக்தி நெருக்கடி; கல்விப் பிரச்சினை தொடர்ந்து முன்னுரிமை பெறுகிறது: பிரதமர்
April 4, 2026, 12:30 pm
எனக்கு எந்த வருத்தமும் இல்லை: காஜாங் நகர்வை தற்காத்தார் ரபிசி
April 4, 2026, 12:29 pm
ஏழ்மையை பொருட்படுத்தாமல் ஜோஅன்னா ஜெபமலர் எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்று சாதனை
April 4, 2026, 12:26 pm
கோத்தா பாருவில் எட்டு வீடுகள் எரிந்தன
April 4, 2026, 12:11 pm
