செய்திகள் மலேசியா
கிக் தொழிலாளர்கள் சட்டம் தொடர்பில் குற்றம் சாட்டுவதற்கு முன் உட்கட்சிப் பிளவுகளை எம்டியூசி தீர்க்க வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
கிக் தொழிலாளர்கள் சட்டம் தொடர்பில் குற்றம் சாட்டுவதற்கு முன் உட்கட்சிப் பிளவுகளை எம்டியூசி தீர்க்க வேண்டும்.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை வலியுறுத்தினார்.
கிக் தொழிலாளர்கள் சட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடுவதில் அரசாங்கம் தவறிவிட்டதாக எம்டியூசி
குற்றம் சாட்டுகிறது.
இதற்கு முன்பாக எம்டியூசி அதன் உட்கட்சித் தலைமைப் பூசல்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
தொழிலாளர் பிரதிநிதிகளுடன் அர்த்தமுள்ள கலந்தாலோசனை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டைக் காரணம் காட்டி, கிக் தொழிலாளர் சட்டம் 872 அமல்படுத்துவதை ஒத்திவைக்குமாறு எம்டியூசி பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து இது வந்துள்ளது.
எம்டியூசி பொதுச் செயலாளர் கமாரூல் பஹ்ரின் மன்சூர், சட்டத்தை தாமதப்படுத்தக் கோரி மனிதவள அமைச்சகத்திடம் சங்கம் முறைப்படி கோரிக்கை விடுத்திருந்தும், இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
கடந்த ஆண்டு முதல் நாங்கள் பலமுறை முயற்சி செய்தும், அமைச்சகத்திடமிருந்து எந்தவிதமான கலந்துரையாடலும் இல்லை என்று அவர் கூறினார்.
இருப்பினும், இந்தச் சட்டம் முழுமையானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக, கடந்த ஆண்டில் பல்வேறு தரப்பினருடன் அரசாங்கம் கிட்டத்தட்ட 400 கலந்துரையாடல் அமர்வுகளை நடத்தியுள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2026, 1:41 pm
உணவுப் பொருட்களின் சரக்கு போதுமானதாக உள்ளது; விலை உயராது: அமைச்சர்
April 4, 2026, 1:40 pm
எரிசக்தி நெருக்கடி; கல்விப் பிரச்சினை தொடர்ந்து முன்னுரிமை பெறுகிறது: பிரதமர்
April 4, 2026, 12:30 pm
எனக்கு எந்த வருத்தமும் இல்லை: காஜாங் நகர்வை தற்காத்தார் ரபிசி
April 4, 2026, 12:29 pm
ஏழ்மையை பொருட்படுத்தாமல் ஜோஅன்னா ஜெபமலர் எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்று சாதனை
April 4, 2026, 12:26 pm
கோத்தா பாருவில் எட்டு வீடுகள் எரிந்தன
April 4, 2026, 12:11 pm
