நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எனக்கு எந்த வருத்தமும் இல்லை: காஜாங் நகர்வை தற்காத்தார் ரபிசி

கோலாலம்பூர்:

தனது அரசியல் எதிர்காலத்தை பழிவாங்கல் என்று வர்ணித்த, மறைந்த அப்துல் காலித் இப்ராஹிமின் முன்னாள் அரசியல் செயலாளர் ஃபாய்கா ஹுசைனின் கருத்தை பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி கடுமையாகச் சாடியுள்ளார்.

ஃபாய்காவின் விமர்சனத்திற்குப் பதிலளித்த ரபிசி,

அந்த அரசியல் நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டதற்காகத் தனக்கு வருத்தமில்லை.
இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

நான் 2014ஆம் ஆண்டுக்குத் திரும்பிச் சென்றால், இதே காரியத்தைத்தான் செய்திருப்பேன். என்று ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

மந்திரி புசார் பதவியிலிருந்து காலித்தை நீக்குவதற்கான ஒரு முதற்கட்ட நடவடிக்கையாக, இடைத்தேர்தலுக்கு வழிவகுக்கும் பொருட்டு காஜாங் மாநிலத் தொகுதியை கெஅடிலான் கட்சி காலி செய்ததையே காஜாங் நகர்வு நடவடிக்கை எனக் குறிப்பிடப்படுகிறது.

அக்காலத்தில், கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு வேட்பாளராக இருக்கவிருந்தார்.

ஆனால் ஓரினப்புணர்ச்சிக் குற்றத்திற்காக அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவால் அவர் தடுக்கப்பட்டார்.

பின்னர் அவரது மனைவி டத்தோஸ்ரீ வான் அஜிஸா வான் இஸ்மாயில், போட்டியிட்டு காலித்திற்குப் பதிலாக மந்திரி புசாராகப் பரிந்துரைக்கப்பட்டார்.

இறுதியில் அப்பதவி, அப்போது கெஅடிலான் துணைத் தலைவராக இருந்த டத்தோஸ்ரீ அஸ்மின் அலிக்கு வழங்கப்பட்டது.

18.5 மில்லியன் அமெரிக்க டாலர் கடனைத் திரும்பப் பெற பேங்க் இஸ்லாம் மலேசியா பெர்ஹாட் முயன்று வந்த நிலையில்,

அது தொடர்பாக காலித்தின் நீதிமன்றத்திற்கு வெளியே ஆன சமரச உடன்படிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து கெஅடிலானன் நேர்மையைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியமானது என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset