செய்திகள் மலேசியா
காலக்கெடுவிற்கு முன்னதாக ஐஜேஎம் நிறுவனத்தைக் கையகப்படுத்த சன்வே நிறுவனம் முயற்சி: நியாயமற்றது எனக் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது
கோலாலம்பூர்:
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதியான காலக்கெடுவிற்கு முன்னதாக, ஐஜேஎம் கார்ப்பரேஷன் பெர்ஹாட்டை சன்வே பெர்ஹாட் தானாக முன்வந்துள்ளது.
இந்த கையகப்படுத்த முன்வந்த சலுகையின் மதிப்பு, கையாளப்பட்ட அணுகுமுறை குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனால் இவ்விவகாரம் தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று ஃபிரி மலேசியா டுடே இணைய ஊடகத்திற்கு இப்ராஹிம் எம் அஹ்மத் அனுப்பிய தலையங்கக் கடிதத்தில் கூறியுள்ளார்.
சன்வே நிறுவனம் ஒரு பங்கிற்கு 3.15 ரிங்கிட்டை இறுதி விலையாக நிர்ணயித்துள்ளது.
இது, நிறுவனத்தின் வலுவான செயல்பாட்டு வரலாற்றின் அடிப்படையில் நியாயமான மதிப்பை பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.
ஜெஃப்ரி சியா தலைமையிலான இந்நிறுவனம், இந்தச் சலுகை சிறந்தது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படாது என வலியுறுத்தப்பட்டது.
மேலும் காலக்கெடுவிற்குள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் சலுகையைத் திரும்பப் பெற்றுக்கொள்வோம் என்று எச்சரித்துள்ளது.
இருப்பினும், பொதுவாக ஒரு பரிவர்த்தனையில் வாங்குபவர் விற்பவரை சம்மதிக்க வைக்க வேண்டிய நிலையில், ஒரு முடிவை விரைவுபடுத்த அழுத்தம் கொடுக்கப்படுவதாக ஒரு கருத்து நிலவுவதால், இந்த அணுகுமுறை கேள்விகளை எழுப்புவதாகக் கருதப்படுகிறது.
அதே நேரத்தில், அந்தச் சலுகை நிறுவனத்தின் உண்மையான மதிப்பைக் குறைத்து மதிப்பிடுவதாகக் கூறப்படுவதால், அது நியாயமற்றது என்று ஐஜேஎம் விவரித்தது.
உண்மையில், பங்குகளின் உண்மையான மதிப்புடன் ஒப்பிடும்போது, அந்தச் சலுகை சுமார் 50 சதவிகித தள்ளுபடியைப் பிரதிபலிப்பதாக ஒரு சுயாதீன ஆலோசகர் முன்பு தெரிவித்திருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், நிறுவனத்தின் பல முக்கிய சொத்துக்கள் தற்போது செயல்பாட்டு நிலைக்குள் நுழைவதாலும், அது எதிர்கால செயல்திறனை மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதாலும், இந்தச் சலுகையை ஒரு பரந்த மூலோபாய சூழலில் மதிப்பிட வேண்டும் என்று ஐஜேஎம் வலியுறுத்தியது.
இலக்கு நிறுவனத்தின் நிலை மிகவும் வலுவானதாகக் கருதப்படாத பட்சத்தில்,ஐஜேஎம்மை கையகப்படுத்த சன்வே மேற்கொள்ளும் இந்தத் தீவிரமான முயற்சிக்குப் பின்னால் உள்ள தர்க்கம் குறித்து இந்த நிலைமை கேள்விகளை எழுப்புகிறது.
அதே நேரத்தில், கடந்த வாரம் நடந்த ஒரு அசாதாரண பொதுக் கூட்டத்தில், சன்வே பங்குதாரர்கள் முன்மொழியப்பட்ட கையகப்படுத்தலை வலுவாக ஆதரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
99 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இந்தச் சலுகையைச் செயல்படுத்துவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
சுமார் 11 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 3.51 பில்லியன் பங்குகளைக் கையகப்படுத்தும் இந்த முன்மொழிவு, இலக்கு நிறுவனத்தின் மதிப்பின் மீதான உயர் நம்பிக்கையைப் பொதுவாகப் பிரதிபலிக்கும் ஒரு பெரிய முதலீடாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், நிறுவனத்தின் நிர்வாகம், பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட் போன்ற முக்கிய பங்குதாரர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஒரு பங்குக்கு 3.15 ரிங்கிட் என்ற விலை ஐஜேஎம்மின் உண்மையான மதிப்பை விடக் குறைவாகவே உள்ளது என்ற கருத்து நிலவுகிறது.
கூடுதலாக, சன்வே பங்குகள் வடிவில் பெரும் பகுதிப் பணம் செலுத்தப்படுவதை உள்ளடக்கிய இந்த முன்மொழிவின் கட்டமைப்பும் கேள்விகளை எழுப்புகிறது.
ஏனெனில் ஐஜேஎம் பங்குதாரர்கள் வாங்குபவரால் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் பங்குகளைப் பெற வேண்டியிருக்கும்.
இந்த நிலைமை, இந்தப் பரிவர்த்தனையில் ஐஜேஎம் பங்குதாரர்களுக்குக் கிடைக்கக்கூடிய சாத்தியமான வருமானம் குறித்து நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துகிறது என அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2026, 1:41 pm
உணவுப் பொருட்களின் சரக்கு போதுமானதாக உள்ளது; விலை உயராது: அமைச்சர்
April 4, 2026, 1:40 pm
எரிசக்தி நெருக்கடி; கல்விப் பிரச்சினை தொடர்ந்து முன்னுரிமை பெறுகிறது: பிரதமர்
April 4, 2026, 12:30 pm
எனக்கு எந்த வருத்தமும் இல்லை: காஜாங் நகர்வை தற்காத்தார் ரபிசி
April 4, 2026, 12:29 pm
ஏழ்மையை பொருட்படுத்தாமல் ஜோஅன்னா ஜெபமலர் எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்று சாதனை
April 4, 2026, 12:26 pm
கோத்தா பாருவில் எட்டு வீடுகள் எரிந்தன
April 4, 2026, 12:11 pm
