நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் கச்சா எண்ணெய் விநியோகம் மற்ற ஆசிய நாடுகளை விடப் பாதுகாப்பானது: பெட்ரோனாஸ் தலைவர் உறுதி

கோலாலம்பூர்: 

மலேசியாவின் மூல எண்ணெய் இறக்குமதியில் ஏறக்குறைய 40 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாகவும் மற்ற ஆசியான் நாடுகளின் கிட்டத்தட்ட 90 சதவீதமும் இருப்பதால், நாட்டில் இன்னும் போதுமான மூல எண்ணெய் விநியோகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்) குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டான் ஸ்ரீ தெங்கு முஹம்மத் தௌஃபிக் தெங்கு அஜிஸ், மலேசியா ஒரு நுகர்வோர் சந்தையாக முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ள சாத்தியத்தையும், எண்ணெய் விலை உயர்வால் பாதிக்கப்படுவதையும் மறுக்கவில்லை என்றார்.

"2014 முதல் 2015 வரையிலேயே, மலேசியா (மூல எண்ணெய்யின்) நிகர இறக்குமதியாளர் என்று ஏற்கனவே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

"எரிசக்தி உற்பத்தி இருப்பதாலும், நாம் நிகர எரிசக்தி ஏற்றுமதியாளராக இருப்பதாலும், 90 சதவீதத்திற்கும் அதிகமான இறக்குமதியை நம்பியிருக்கக்கூடிய மற்ற ஆசியான் நண்பர்களுடன் ஒப்பிடும்போது, நமக்கு இன்னும் விநியோகம் இருக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது.

"ஆனால், நாம் ஒரு நுகர்வோர் சந்தையாக முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளோம் என்பதற்கான சாத்தியம் இல்லை" என்று அவர் வெள்ளிக்கிழமை மலேசிய வானொலி தொலைக்காட்சியின் டிவி1 சேனலில் ஒளிபரப்பான 'பிச்சாரா நராடிஃப் காஸ் என்ற நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்ட போது கூறினார்.

பெட்ரோனாஸின் கூற்றுப்படி, முதிர்ந்த நிலப்பரப்பு இயற்கையாகவே சுருங்கும்போது மலேசியாவின் மூல எண்ணெய் உற்பத்தி படிப்படியாக குறைந்து வருகிறது.

1990கள், 2000களின் முற்பகுதியில் மலேசியா ஒரு நாளைக்கு 700,000 பீப்பாய்களுக்கும் அதிகமாக உற்பத்தி செய்தது. இருப்பினும், தற்போது உள்நாட்டு மூல எண்ணெய் உற்பத்தி ஒரு நாளைக்கு 350,000 பீப்பாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், நாட்டின் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பெட்ரோனாஸின் சுத்திகரிப்பு அமைப்புக்கு ஒரு நாளைக்கு சுமார் 700,000 பீப்பாய்கள் மூல எண்ணெய் தேவைப்படுகிறது.

இது ஒரு கட்டமைப்பு இடைவெளியை உருவாக்குகிறது. இது இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று அவர் விளக்கினார்.
இந்தத் தேவையில் கிட்டத்தட்ட பாதி இறக்குமதி விநியோகத்தில் பெரும்பாலானவை ஹோர்முஸ் நீரிணை வழியாக அனுப்பப்படுகின்றன.

உள்நாட்டு மூல எண்ணெய் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டிருப்பதைத் தாம் உணர்ந்திருப்பதாக தெங்கு முஹம்மத் தௌஃபிக் கூறினார்.
"இருப்பினும், ஒப்பந்ததாரர்கள் , பிற முதலீட்டாளர்களுடன் இணைந்து ஆய்வும் தேடுதல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் மலேசியாவில் பெரும்பாலும் இயற்கை எரிவாயு வளங்களே இருக்கின்றன," என்று அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset