செய்திகள் மலேசியா
முன்னாள் மசீச தலைவர் துன் டாக்டர் லிங் லியோங் சிக் காலமானார்
கோலாலம்பூர்:
82 வயதான துன் டாக்டர் லிங் லியோங் சிக் இன்று காலமானார்.
துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர்களுக்கு அனுப்பப்பட்ட செய்தியில் அவரது மறைவு உறுதிப்படுத்தப்பட்டது.
அந்தப் பல்கலைக்கழகத்தில் அவர் வேந்தராகப் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேராக், கோலாகங்சாரில் பிறந்த இந்த முன்னாள் எம்சிஏ தலைவர், 1986 முதல் 2003 வரை போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றினார்.
இதற்கு முன்னர், அவர் துணை தகவல் தொடர்பு அமைச்சர், துணை நிதி அமைச்சர், துணை கல்வி அமைச்சர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார்.
லிங், சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றவராவார்.
அவர் 1974 ஆம் ஆண்டு மாத்தா கூச்சிங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடுத்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் (1978, 1982) அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
பின்னர் 1986 ஆம் ஆண்டு லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று அந்த இடத்தை அவர் நான்கு முறை தக்க வைத்துக் கொண்டார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 4, 2026, 1:41 pm
உணவுப் பொருட்களின் சரக்கு போதுமானதாக உள்ளது; விலை உயராது: அமைச்சர்
April 4, 2026, 1:40 pm
எரிசக்தி நெருக்கடி; கல்விப் பிரச்சினை தொடர்ந்து முன்னுரிமை பெறுகிறது: பிரதமர்
April 4, 2026, 12:30 pm
எனக்கு எந்த வருத்தமும் இல்லை: காஜாங் நகர்வை தற்காத்தார் ரபிசி
April 4, 2026, 12:29 pm
ஏழ்மையை பொருட்படுத்தாமல் ஜோஅன்னா ஜெபமலர் எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்று சாதனை
April 4, 2026, 12:26 pm
