நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கட்சியில் மீண்டும் சேருவதற்கான 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை அம்னோ பெற்றுள்ளது

கோலாலம்பூர்:

கட்சியில் மீண்டும் சேருவதற்கான 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை அம்னோ பெற்றுள்ளது.

இரு சில காரணங்களால் பல முன்னாள் தலைவர்கள் அம்னோவில் இருந்து  நீக்கப்பட்ட, இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்களிடமிருந்து, 'ருமா பாங்சா' முன்முயற்சி மூலம் கட்சியில் மீண்டும் இணைவதற்காக 100க்கும் மேற்பட்ட விண்ணப்ப கடிதங்களை அம்னோ  பெற்றுள்ளது.

தங்கள் விண்ணப்பக் கடிதங்களை அனுப்பியுள்ள முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கைரி ஜமாலுடின், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மேலும் முன்னாள் ஜெம்போல் அம்னோ பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது சலீம் ஷெரீஃப், முன்னாள் தெப்ராவு அம்னோ பிரிவுத் தலைவர் டத்தோ மௌலிசான் பூஜாங் உள்ளிட்ட பிற முக்கியப் பிரமுகர்களும் இவ்வாறு செய்துள்ளனர்.

முன்னாள் அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் ஷாரில் சுபியான் ஹம்டான், முன்னாள் சிலாங்கூர் அம்னோ தலைவர் டான்ஸ்ரீ நோ ஓமர், மூத்த அரசியல்வாதியான டான்ஸ்ரீ டாக்டர் ராய்ஸ் யாத்திம் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளும் கலந்துரையாடல்களும் அம்னோவால் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அம்னோ தலைவர்கள், உறுப்பினர்களின் அனைத்து விண்ணப்பங்களும் மேல்முறையீடுகளும் ஏப்ரல் 17 அன்று நடைபெறும் கட்சியின் உச்ச செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset