நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிபோதையால் நிகழ்ந்த விபத்தில் மரணமடைந்த அமிரூல் ஹபிஸின் குடும்பத்திற்கு முழுமையான சொக்சோ இழப்பீடு: டத்தோஸ்ரீ அஸ்மான்

ஷாஆலம்:

குடிபோதையால் நிகழ்ந்த விபத்தில் மரணமடைந்த அமிரூல் ஹபிஸின் குடும்பத்திற்கு முழுமையான சொக்சோ இழப்பீடு வழங்கப்படும்.

சொக்சோவின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜிஸ் இதனை கூறினார்.

குடிபோதையால் வாகனம் ஓடிய நபரால் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அமிருல் ஹபிஸ் மரணமடைந்தார்.

மறைந்த அமிருல் ஹபிஸ் ஓமரின் மனைவி, அவரது கணவர் பெர்கேசோவிற்கி பங்களித்தன அடிப்படையில் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மாதமும் சமூகப் பாதுகாப்பு அமைப்பிலிருந்து வாரிசு ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர் ஆவார்.

மேலும் 15 ஆண்டுகளாக டிவிஎச் மலேசியா என்ற சரக்கு போக்குவரத்து நிறுவனத்தில் ஸ்டோர் உதவியாளர்களாகப் பணியாற்றிய 33 வயதான அமிரூல் ஹபிஸின் மூன்று குழந்தைகளும் இதே பலனைப் பெறுகின்றனர்.

இது கணவர், தந்தையை இழந்து தவிக்கும் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

பெர்கேசோவிம் ஓய்வூதியப் பலன்கள் மூலம் தனது குடும்பத்தின் நலன் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமளிக்கப்பட்ட இந்த மாதாந்திரத் தொகை, என்னை 'மூச்சுவிட' அனுமதிக்கிறது.

மேலும்  தற்போது குடும்பத் தலைவரை இழந்த தனது குழந்தைகளின் எதிர்காலம்,  கல்வியில் கவனம் செலுத்த உதவுவதாக நோர் நடியா அப்துல் மஜித் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset