நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறுமி தனவிதா மரணம்: தாய் உட்பட நால்வர் மீது கொலை குற்றச்சாட்டு

தைப்பிங்:

சிறுமி தனவிதா கொலை செய்யப்பட்ட வழக்கில் தாயார் உட்பட நால்வர் மீது இன்று தைப்பிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

தைப்பிங்கில் உள்ள தாமான் சுங்கை மாஸ் எனும் இடத்தில் எட்டு வயது தன்விதா என்ற சிறுமிக்கு மணரம் இந்த  குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

தைப்பி்ங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிறுமியின் தாயார் எம். சாவித்திரி ( வயது 28), எம்.சத்திஸ்குமார் ( வயது 27), வீரலட்சுமி வயது 53) எம். முரளி (வயது 49) ஆகிய நால்வர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

இவர்களுக்கு எதிராக மரண தண்டனை வகை செய்யும் குற்றவியல்  பிரிவு 302 கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் ஆர்.பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கில் அந்த நால்வருக்கு எதிரான குற்றச்சாட்டில் ஒப்புதல் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

ஆனால்  இந்த நால்வரும் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது  புரிவதாக தலையசைத்தனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஃபரிஹா அடிலா இவர்களுக்கு ஜாமனின் வழங்க இயலாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்

இவர்களுக்கு எதிராக அடுத்த வழக்கின் செவிமடுப்பு மே 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் பாதிக்கபட்ட சிறுமியின் சார்பில வழக்கறிஞர் டினேஷ், தேவநேசன் கணேசன், லோவ் ஆகிய முன்று பேர் ஆஜராயினர்.

இந்த வழக்கில் மரணம் அடைந்த சிறுமிக்கு ஆதரவாக பலர் திரண்டு பதாகை ஏந்தி நீதிவேண்டும் என்று கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset