நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவின் புதிய இயக்குநராக ரவீந்திரன் நாயர் நியமனம்; 2025ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கை விரைவில் வெளியிடப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

மித்ராவின் 2025ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

மனிதவள அமைச்சரும் மித்ரா தலைவருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

மித்ராவின் புதிய இயக்குநராக ரவீந்திரன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வேளையில் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட்டை கொண்டு பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அத்திட்டத்திற்கான நிதிகள் அனைத்தும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

இன்னும் இரண்டு வாரங்களில் அந்த நிதி முழுமையாக முடிந்து விடும்.

அதை தொடர்ந்து என்ன திட்டங்களுக்கு இந்நிதி பயன்படுத்தப்பட்டது.

எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என மித்ராவின் நிதி அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

2026ஆம் ஆண்டுக்கான நிதியில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளது.

கல்வி, பொருளாதார மேம்பாடு, வாழ்க்கை செலவினங்கள் உட்பட பல விவகாரங்களில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

குறிப்பாக கல்விக்கான திட்டங்கள் தான் முன்னுரிமை என்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset