நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிக் தொழிலாளர் ஒழுங்குமுறை அமைப்பை வழிநடத்த 76 உறுப்பினர்கள் நியமனம்; ஆசியாவிலேயே கிக் தொழிலாளர்களுக்கான சட்டத்தை அமல்படுத்திய முதல் நாடு மலேசியா: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

ஆசியாவிலேயே கிக் தொழிலாளர்களுக்கான சட்டத்தை அமல்படுத்திய முதல் நாடு மலேசியாவாகும்.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை பெருமிதத்துடன் கூறினார்.

நாட்டில் உள்ள 1.64 மில்லியன் தொழிலாளர்களை பாதுகாக்கும் கிக் தொழிலாளர் சட்டம் 2025 (சட்டம் 872) ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது.

மலேசியாவில் கிக் பொருளாதாரத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதிலும், இத்துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு மேலும் விரிவான நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதையும் இச்சட்டம் அடிப்படையாக கொண்டுள்ளது.

இச்சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் மலேசியா மிகப் பெரிய சாதனையை படைத்துள்ளது.

குறிப்பாக ஆசியாவிலேயே இந்த சட்டத்தை அமல்படுத்திய முதல் நாடு மலேசியாவாகும்.

ஆக இச்சட்டம் நிச்சயம் கிக் தொழிலாளர்களின் நலனை காக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கிக் தொழிலாளர்கள் சட்டம் 2025-ஐ செயல்படுத்தும் ஒரு பகுதியாக, கிக் தொழிலாளர்களுக்கான தீர்ப்பாயம், கிக் ஆலோசனை மன்றம் ஆகியவற்றிற்கு மொத்தம் 76 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிக் தொழிலாளர்களுக்கான தீர்ப்பாயம் நியமனத்தில் 22 இடைக்காலத் தொழிற்கட்சி நீதிமன்றத் தலைவர்களும் 28 தொழிலாளர் உறவு அதிகாரிகளும் அடங்குவர்.

அதே சமயம் கிக் ஆலோசனை மன்றம் அரசாங்கப் பிரதிநிதிகள், கிக் தொழிலாளர்கள்,  ஒப்பந்த நிறுவனங்கள் அடங்கிய 26 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதன் தலைவராக டத்தோ டாக்டர் கசாலி அபாஸ் உள்ளார் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset