செய்திகள் சிந்தனைகள்
ஒழுங்கமைத்தல் என்பது இஸ்லாத்தின் முக்கியமான பண்புகளில் ஒன்று - வெள்ளிச் சிந்தனை
ஒழுங்கமைத்தல் என்பது இஸ்லாத்தின் முக்கியமான பண்புகளில் ஒன்று. தனிமனித வாழ்வு, சமூகம், வழிபாடுகள் என அனைத்திலும் ஒழுங்கமைத்தலை இஸ்லாம் வலியுறுத்திகிறது.
உதாரணமாக.. தொழுகை: குறிப்பிட்ட நேரத்தில், வரிசையாக நின்று, ஒரே சீராகச் செய்யப்பட வேண்டிய வழிபாடு.
நோன்பு: அதிகாலை முதல் அந்தி சாயும் வரை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படும் விரதம்.
ஜகாத்: பொருளாதாரத்தைச் சமன்படுத்துவதற்கான மாபெரும் சமூக ஒழுங்கமைப்பு முறை.
இஸ்லாம் என்பது வெறும் நம்பிக்கைகள் சார்ந்தது மட்டுமல்ல. அது மனிதனின் சிந்தனை, செயல், நேரம் மற்றும் பழக்கவழக்கங்களைச் சீரமைத்து, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்வியலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எதற்காக இந்தப் பீடிகை?
பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்க், சென்ற ஆண்டு (2025) முழுவதும் சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்ற சாதனையை படைத்துள்ளது.
ஹெல்சிங்க் பெருநகரப் பகுதியில் சுமார் 13 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். எனில் இது கிட்டத்தட்ட அசாத்தியமான சாதனை.
பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்ததன் மூலம் இதை அவர்கள் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள்.
குறைந்த வேக வரம்புகள், சட்டத்தை கடுமையாக அமல்படுத்துதல், 70-க்கும் மேற்பட்ட புதிய வேகக் கண்காணிப்புக் கேமராக்கள், ஆகியவை உயிரிழப்புகளின் எண்ணிக்கையை பூஜ்ஜியத்திற்குக் கொண்டுவந்தன.
பின்லாந்தின் அபராத முறையும் தனித்துவமானது. வருமானத்தின் அடிப்படையில் அபராதம் கணக்கிடப்படுவதால், அதிவேகமாகச் செல்வது மிகவும் அதிக செலவை ஏற்படுத்தும். இதனால் செல்வந்தர்கள் சிலபோது பெரும் தொகையை அபராதமாகச் செலுத்துகிறார்கள்.
அங்கே அவர்கள் வெறுமனே பேசுபவர்களாக மட்டும் இருப்பதில்லை. மாறாக தங்கள் வார்த்தைகளைச் செயலில் காட்டுகிறார்கள்.
ஒரு வருடம் முழுவதும் கார் விபத்தில் யாரும் இறக்காத நகரம் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி! எவ்வளவு மகத்தான சாதனை!
என்ன செய்ய? இஸ்லாம் வலிறுத்தும் பண்புகளை யார் யாரோ பின்பற்றுகிறார்கள்.
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 12:01 am
நினைத்தது ஒன்று! நடந்தது வேறொன்று: பிரிக்ஸ் மாநாடு ஒரு கண்ணோட்டம்
September 11, 2026, 6:33 am
உடல் பருமன் என்பது வெறும் தோற்றப் பிரச்சனையா? - வெள்ளிச் சிந்தனை
September 4, 2026, 8:14 am
உலக வாழ்க்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருடன் ஒப்பிடுகிறான்? - வெள்ளிச் சிந்தனை
August 31, 2026, 12:36 pm
நேபாள் வெள்ளம் திட்டமிட்ட சதியா?
August 28, 2026, 7:29 am
பெண்களுக்கு கண்ணியம் வழங்கியவர் எவர்? - வெள்ளிச் சிந்தனை
August 21, 2026, 7:35 am
வாழ்க்கைக் கதைகள் நமக்குத் தரும் பாடங்கள் - வெள்ளிச் சிந்தனை
August 17, 2026, 9:49 am
தொப்பையால் ஆபத்து - ஆரோக்கிய சிந்தனை
August 14, 2026, 9:39 am
அப்பாஸிய சகாப்தம் மார்க்க அறிஞர்களை கௌரவித்த உன்னதமான காலகட்டம் - வெள்ளிச் சிந்தனை
August 7, 2026, 9:43 am
வாழும் காலம் எல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்த இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவுநாள்
August 7, 2026, 7:17 am
