செய்திகள் இந்தியா
நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருசக்கர வாகனக் கும்பல்: டெல்லி காவல்துறையின் சாதுரிய நடவடிக்கைநகைப் பறிப்பில் ஈடுபட்ட இருசக்கர வாகனக் கும்பல்: டெல்லி காவல்துறையின் சாதுரிய நடவடிக்கைநகைப் பறிப்பில் ஈடுபட்ட இருசக்கர வாகனக் கும்பல்: டெல்லி காவல்துறையின் சாதுரிய நடவ
டெல்லி:
தெற்கு டெல்லியின் சி.ஆர். பார்க் பகுதியில் அண்மையில் நடந்த சங்கிலிப் பறிப்புச் சம்பவம் தொடர்பாக நான்கு பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த வாரம் குடியிருப்புப் பகுதி ஒன்றில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இந்தத் துணிகரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சம்பவம் குறித்துப் புகாரைப் பதிவு செய்த காவல்துறை, குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது.
சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்புப் படக்கருவிகளை (CCTV) ஆய்வு செய்ததில், குற்றவாளிகள் பயன்படுத்திய வாகனத்தின் அடையாளங்கள் கண்டறியப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சங்கிலிப் பறிப்பில் நேரடியாக ஈடுபட்ட இருவர், அவர்களுக்குத் துணையாக இருந்த மேலும் இருவர் என மொத்தம் நான்கு பேர் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலி, அவர்கள் குற்றத்திற்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இந்தக் கும்பல் நகரின் பல்வேறு பகுதிகளில் இதே போன்ற தொடர் வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
குற்றவாளிகள் மீது திருட்டு, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் சிக்கியதைத் தொடர்ந்து, குடியிருப்புப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியை மேம்படுத்தவும், ரோந்துப் பணிகளை அதிகரிக்கவும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்கள் தங்களது பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாராவது நடமாடினால் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
