செய்திகள் மலேசியா
மலாய் அரசியல் தொடர்ந்து பிளவுபட்டிருக்க அனுமதிப்பது மிகப் பெரிய தவறு: துன் மகாதீர்
கோலாலம்பூர்:
இனத்தின் அடிப்படையில் பல அரசியல் கட்சிகள் நிறுவப்பட்டு, மலாய் அரசியல் தொடர்ந்து பிளவுபட்டிருக்க அனுமதித்ததன் மூலம் மலாய்கள் தவறு செய்துவிட்டனர்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இதனை கூறினார்.
செய்யப்பட்ட இந்தத் தவறின் விளைவாக, இப்போது அவர்கள் தங்களுக்குள் மட்டுமே போட்டியிடுகிறார்கள்.
இன்று பலர் அம்னோவை வீழ்த்தியது பிரிட்டிஷாரைத் தோற்கடித்ததாக நினைக்கிறார்கள்.
ஒரு கட்சியால் வெற்றியைத் தர முடியும். இல்லை என்றால் பல கட்சிகள் உருவாக்கப்பட்டன.
இது மலாய்க்காரர்களைப் பிளவுபடுத்துகிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் எவராலும் வெற்றி பெறுவது சாத்தியமில்லை.
அவர்கள் தோற்றுவிட்டார்கள். நாடு அடமானம் வைக்கப்பட்டுவிட்டது. மலாயா வேறொருவரின் நிலமாகிவிட்டது.
தவறு யார் மீது? தவறு மலாய்க்காரர்கள் மீதுதான். இது மலாய்க்காரர்களின் கடைசிப் போராட்டம் என்று அவர் தனது முகநூல் கணக்கு மூலம் கூறினார்.
ஒரு காலத்தில், மலாய்க்காரர்கள் அம்னோ என்ற ஒரே கட்சியின் மூலம் ஒன்றுபட்டிருந்தனர்.
கடந்த காலத்தில் முக்கியமானது அம்னோ அல்ல, மாறாக அம்னோ மூலமான மக்களின் ஒற்றுமையே என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2026, 1:18 pm
சட்டத்தில் அதிகார பாராபட்சம்; உலக ஒழுங்கைச் சீர்குலைக்கும்: பிரதமர் எச்சரிக்கை
April 2, 2026, 12:39 pm
தொழிற்சாலையில் ரகசியமாக நடந்த போதைப்பொருள் வணிகம்: சுங்கத்துறையினரின் சோதனையில் மூவர் கைது
April 2, 2026, 12:09 pm
எரிபொருள் விலை உயர்வில் போலி பதிவுகள்: ஐந்து பேர் மீது எம். சி. எம். சி விசாரணை
April 2, 2026, 11:58 am
ரோம்பீனில் போலிஸ் வேன் மோதியதில் மெக்கானிக் பலி
April 2, 2026, 11:14 am
காமன்வெல்த் சட்டக் கல்வி சங்கத்தின் மாநாடு 2026ஐ பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தொடக்கி வைத்தார்
April 2, 2026, 10:57 am
சட்டவிரோத இல்லத்தில் 36 சிறுவர்கள்: 10 ஆண்டுகளாகத் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை
April 2, 2026, 10:17 am
தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்ட பன்றி இறைச்சி: கெடாவில் 7 உள்ளூர் நபர்கள் கைது
April 2, 2026, 9:44 am
