நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிபொருள் விலை உயர்வில் போலி பதிவுகள்: ஐந்து பேர் மீது எம். சி. எம். சி விசாரணை

புத்ராஜெயா: 

எரிபொருள் விலை உயர்வு குறித்து தவறான தகவல்களை பரப்பியதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்கள் மீது மலேசிய தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் (எம். சி. எம். சி) விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று சமூக ஊடக தளமான த்ரெட்ஸில் பரப்பப்பட்ட தவறான பதிவுகள் அந்த ஐவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஐந்து நபர்களில் மூன்று பேர் ஏற்கனவே தங்கள் அறிக்கைகளை பதிவு செய்ய வரவழைக்கப்பட்டுள்ளனர் என்பதை எம். சி. எம். சி உறுதிப்படுத்தியது.

"பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை உயர்வு குறித்து அனைத்து தனிநபர்களும் பரப்பிய உள்ளடக்கம் தவறானது. இது நுகர்வோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டது" என்று ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அப்பதிவில் டிவி 3 இன் செய்தி பதிவுகள் பயன்படுத்தியதாகவும் அது மேலும் கூறியது.

வைரஸ் உள்ளடக்கம் அவர்களால் தயாரிக்கப்படவில்லை, ஆனால் மூன்றாம் தரப்பினரால் தயாரிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மறுப்பு தெரிவித்து டிவி3 போலிஸில் புகார் செய்துள்ளது.

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக RM500,000 அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும், பொதுமக்களைத் தவறாக வழிநடத்த சமூக ஊடக தளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதை எம். சி. எம். சி தீவிரமாக எடுத்துக்கொள்கிறது.

"தற்போதுள்ள சட்டங்களை மீறிய எந்தவொரு நபருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களைப் பொறுப்புடன் பயன்படுத்தவும், பொது நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தகவல் தொடர்பு வசதிகளை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset