நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல: எஸ்.பி.எம் தேர்வில் 11 'ஏ' க்களைப் பெற்ற சதுரங்க வீரர்

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் பாரா சுக்மா (Para SUKMA) சதுரங்க வீரரான முஹம்மத் நசீர் தனேஷ், 2025-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் (SPM) தேர்வில் 11 'ஏ' க்களைப் பெற்று மிகச்சிறந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார். 

சிரம்பான், டத்தோ ஷேக் அஹமத் தேசிய இடைநிலைப் பள்ளியில் பயின்ற இவர், மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் மிக உயரிய ஏ பிளஸ் (A+) தரத்தைப் பெற்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

சிறு வயது முதலே 'ஆஸ்டியோஜெனிசிஸ் இம்பெர்ஃபெக்டா' (Osteogenesis Imperfecta) எனப்படும் எலும்பு முறிவு நோயால் பாதிக்கப்பட்ட நசீர் தேனேஷ், தனது உடல் ரீதியான சவால்களைத் தாண்டி இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். 

மாதிரித் தேர்வில் 6 'A' க்களை மட்டுமே பெற்றிருந்த தமக்கு, இறுதித் தேர்வில் கிடைத்த இந்த 11 'A' வெற்றி பெரும் நெகிழ்ச்சியைத் தருவதாகவும், இது தனது விடாமுயற்சிக்குக் கிடைத்த பலன் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தனது இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட நசீர், எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பப் பொறியியல் (IT Engineering) துறையில் கால்பதிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

உயர்கல்வியைத் தொடர்ந்தாலும், தமக்கு மிகவும் பிடித்தமான சதுரங்க விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடப் போவதாகவும் இந்தச் இளம் சாதனையாளர் உறுதியளித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset