நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மறைவு: பெந்தோங் காவல்துறை விசாரணை

பெந்தோங்:

பஹாங் மாநிலத்தின் பெந்தோங், தாமான் ஓர்கிட் பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த மார்ச் 30-ஆம் தேதி காலை 6.30 மணியளவில், 43 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவி, ஐந்து பிள்ளைகள் வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் 41 வயதுடைய பி. ரேக்கா, அவரது பிள்ளைகளான 19 வயது எஸ். ரூபன், 17 வயது எஸ். ஷரிவினா நாயர், 16 வயது எஸ். ஷாசினி நாயர், 14 வயது எஸ். பிரிதிவி நாயர், 4 வயது சிறுவன் எஸ். லாஷ்வின் நாயர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இவர்கள் கடைசியாகப் பெந்தோங், தாமான் ஓர்கிட், லோரோங் 6-இல் உள்ள தங்களின் இல்லத்தில் இருந்ததாகப் பெந்தோங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்பரிண்டெண்டன் ஜைஹாம் முஹம்மத் கஹார் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலிசார், காணாமல் போன ஆறு பேரையும் கண்டுபிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

இவர்களைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாகப் பெந்தோங் மாவட்டக் காவல்துறைத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டு மையத்தை (09-2231999) என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள எந்தவொரு காவல் நிலையத்திலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset