செய்திகள் மலேசியா
வயதுக்கு வராத பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாக 3 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு
பாத்து பஹாட்:
வயது வராத இரண்டு பெண்களைப் பாலியல் வல்லுறவு, தொந்தரவு செய்ததாக ஒரு மாணவர் உட்பட மூன்று இளைஞர்கள் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட்டனர்.
மூவரில் 16 வயது இளைஞன் குற்றமிழைத்ததாக ஒப்புக்கொண்டான். 15, 16 வயதுடைய மற்ற இருவர் நீதிபதி அருண் நோவல் தாஸ் முன்பாக வாசிக்கப்பட்ட தனித்தனி குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.
முதல் வழக்கில், 16 வயது இளைஞனும் அவனது நண்பனும் மார்ச் 27-ல் இரவு 10 மணிக்கு தொங்காங் பேச்சாவில் ஒரு கட்டிடத்தின் பின்புறத்தில் 14 வயது பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
16 வயது இளைஞன் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றில் ஏதேனும் இரண்டு தண்டனை கொண்ட குற்றவியல் சட்டத்தின் பிரிவு 354-ன் கீழ் குற்றமிழைத்ததாக ஒப்புக்கொண்டான்.
இரு குற்றவாளிகளுக்கும் தலா RM1,500 ஜாமீன் அனுமதிக்கப்பட்டது. ஒழுக்க அறிக்கை, வழக்கு உண்மைகள், தண்டனை வழங்குதல், குற்றவாளிக்கு ஆவண சமர்பிப்பு, வழக்கறிஞர் நியமனத்திற்காக வழக்கின் அடுத்த விசாரணை மே 13 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதே நீதிமன்றில் தனி வழக்கில், மற்றொரு இளைஞன் 15 வயது பெண்ணைக் கூட்டாக பாலியல் வல்லுறவு செய்ததாகக் குற்றமிழைத்ததை மறுத்துள்ளான்.
குற்றவாளியும், முன்பே குற்றமிழைத்ததாக ஒப்புக்கொண்ட 17 வயது கூட்டாளியும், கடந்த ஆண்டு அக்டோபர் 29-ல் இரவு 10 மணி முதல் 11.59 மணிக்கு இடையே பத்து பஹாட்டில் உள்ள ஒரு வீட்டில் பாதிக்கப்பட்டவரைப் பாலியல் வல்லுறவு செய்ததாக கூறப்படுகிறது.
அதிகபட்சம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை கொண்ட குற்றவியல் சட்டத்தின் பிரிவு 375B-ன் கீழ் குற்றச்சாட்டு வகுக்கப்பட்டது.
இவர்களுக்கும் RM1,500 ஜாமீன் அனுமதிக்கப்பட்டு விசாரணை தேதியாக மே 13 நிர்ணயிக்கப்பட்டது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 10:45 pm
எரிபொருள், மின்சார விலைகள் குறித்து போலிச் செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: பிரதமர்
April 1, 2026, 8:48 pm
ஒரு லிட்டர் டீசல் விலை 6.02 ரிங்கிட்: இதுவே வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையாகும்
April 1, 2026, 8:46 pm
மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் திருவள்ளுவர் சிலை: துணையமைச்சர் 7,000 ரிங்கிட் நிதி வழங்கினார்
April 1, 2026, 5:30 pm
HRPB இதயவியல் குழுவிற்கு பிரதமர் வாழ்த்து
April 1, 2026, 5:05 pm
சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல: எஸ்.பி.எம் தேர்வில் 11 'ஏ' க்களைப் பெற்ற சதுரங்க வீரர்
April 1, 2026, 4:48 pm
