செய்திகள் மலேசியா
HRPB இதயவியல் குழுவிற்கு பிரதமர் வாழ்த்து
கோலாலம்பூர்:
பேராக்கின் ஈப்போவில் உள்ள ராஜா பெர்மைசுரி பைனுன் மருத்துவமனையின் (HRPB) இதயவியல் குழு சர்வதேச அரங்கில் மலேசியாவிற்கு பெருமை சேர்த்ததற்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
பயிற்சியில் உள்ள உறுப்பினர்கள் (FITs) ஜெப்பர்டி போட்டியில் உலக சாம்பியனாக வெளிவந்த குழு, சுகாதார துறையில் சிறப்பைத் தொடர்ந்து பதிவு செய்ய சமூகத்திற்கு ஊக்கமளிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
"ACC 2026 உலக சாம்பியனாக வெளிவந்து சர்வதேச அரங்கில் மலேசியாவிற்கு பெருமை சேர்த்த ராஜா பெர்மைசுரி பைனுன் மருத்துவமனையின் இதயவியல் குழுவிற்கு மிகுந்த வாழ்த்துக்கள்.
"இந்த வெற்றி சுகாதார துறையில் சிறப்பை தொடர்ந்து பதிவு செய்து நாட்டின் திறனை வலுப்படுத்த ஊக்கமாக அமையட்டும்" என்று அவர் இன்று சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.
இதற்கு முன்பு, நியூ ஆர்லியன்ஸில் நடைபெற்ற அமெரிக்கன் கொலேஜ் ஆஃப் கார்டியாலஜி மாநாடு (ACC) 2026-ல் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டியில் அந்தக் குழு உலக சாம்பியனாக வெளிவந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
நாட்டின் மூன்று இளம் நிபுணர்களான டாக்டர் சென் தாய் மெங், டாக்டர் அங் ஜியன்-காங், டாக்டர் யீ ஷென் யூ ஆகியோரின் கூட்டு முயற்சியில் பல நாடுகளிலிருந்தான போட்டியாளர்களை வென்று இந்த வெற்றி அடையப்பட்டது.
சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸுல்கெஃப்லி அஹ்ம்மத், முன்பு இந்த மதிப்புமிக்க சாதனை சர்வதேச அளவில் சிறந்தவர்களுக்கு இணையாக மலேசிய மருத்துவ நிபுணர்களின் திறனை நிரூபிக்கிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 10:45 pm
எரிபொருள், மின்சார விலைகள் குறித்து போலிச் செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: பிரதமர்
April 1, 2026, 8:48 pm
ஒரு லிட்டர் டீசல் விலை 6.02 ரிங்கிட்: இதுவே வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையாகும்
April 1, 2026, 8:46 pm
மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் திருவள்ளுவர் சிலை: துணையமைச்சர் 7,000 ரிங்கிட் நிதி வழங்கினார்
April 1, 2026, 5:05 pm
சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல: எஸ்.பி.எம் தேர்வில் 11 'ஏ' க்களைப் பெற்ற சதுரங்க வீரர்
April 1, 2026, 4:48 pm
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மறைவு: பெந்தோங் காவல்துறை விசாரணை
April 1, 2026, 4:45 pm
