செய்திகள் மலேசியா
மனைவியைக் கொலை செய்ய முயன்றதாக கணவர் குற்றம் சாட்டப்பட்டார்
ஈப்போ:
கடந்த மாதம் ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தில் மனைவியைக் கொலை செய்ய முயன்றதாக ஒரு வேலையற்றவர் புதன்கிழமை ஈப்போ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குற்றவாளியான முஹம்மத் யூசுஃப் மாட் யாத்திம் (42), மார்ச் 25 அன்று மரணத்தை விளைவிக்கலாம் என தெரிந்தும் தலையணையால் தன் மனைவியான நூர் ஷாஸ்வானா முஹம்மத் தலாஹா (38)-ன் முகத்தை மூடி அழுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 307-ன் கீழ் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். மேலும்,பாதிக்கப்பட்டவருக்குக் கடுமையான காயம் ஏற்படுத்தினால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
மூன்று குழந்தைகளின் தந்தையான குற்றவாளி, நீதிபதி மேவார் சுலைமான் அஹ்ம்மத் தர்மிஜி முன்பாக குற்றமிழைத்ததை மறுத்துள்ளார்.
வழக்கு அதிகாரி இன்ஸ்பெக்டர் ஜாஹிரா முஸா, விசாரணையின் போது குற்றவாளி காட்டிய ஆக்கிரோஷமான நடத்தையைக் காரணமாகக் கூறி ஜாமீன் அனுமதிக்க வேண்டாம் என்று நீதிமன்றத்தைக் கோரினார்.
விசாரணை முழுவதும் குற்றவாளி ஆக்கிரோஷமாக நடந்துகொண்டதாகவும், ஒரு முறை நான்காவது மாடியிலிருந்து குதிக்க முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்றம் அந்த கோரிக்கையை ஏற்றது. குற்றவாளிக்கு வழக்கறிஞரை நியமிக்கும் வாய்ப்பும் வழங்கி மறு விசாரணை தேதியாக வரும் மே 4-ஐ நிர்ணயித்தது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 3:58 pm
ரோன்95, டீசல் குறித்த புதிய கடுமையான விதிகள் இன்று நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன
April 1, 2026, 3:23 pm
தன் நாட்டவரையே கொலை செய்ததாக இரண்டு மியான்மர் குடிமக்கள் குற்றம் சாட்டப்பட்டனர்
April 1, 2026, 12:51 pm
எரிபொருள் விலை உயர்வு அபாயம்: மின்சாரத் துறைக்கான அறைகூவல்களை எதிர்கொள்ளத் தயாராகும் மலேசியா
April 1, 2026, 12:22 pm
வெப்ப அலையை எதிர்கொள்ளும் மலேசிய அரசு: 4 மாநிலங்களில் செயற்கை மழை பொழியவைக்கும் அதிரடித் திட்டம்
April 1, 2026, 12:14 pm
மீண்டும் கொழுந்துவிட்டு எரியும் நிலத்தடித் தீ: கிராம மக்கள் கடும் பீதி
April 1, 2026, 11:55 am
மேற்காசிய மோதல்: மலேசியாவின் நிலையை வலுப்படுத்த 3 துறைகளை உலக வங்கி கோடிட்டுக் காட்டுகிறது
April 1, 2026, 11:52 am
மர்மமான முறையில் மாயமான 39 வயதுப் பெண்: தீவிர தேடுதலில் பினாங்கு போலிஸ்
April 1, 2026, 11:10 am
