நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிபொருள் விலை உயர்வு அபாயம்: மின்சாரத் துறைக்கான அறைகூவல்களை எதிர்கொள்ளத் தயாராகும் மலேசியா

புத்ராஜெயா: 

மேற்காசிய நாடுகளில் நீடித்து வரும் பதற்றமான சூழலால், மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருட்களின் விலை உயரக்கூடும் என்பதால், அதனை எதிர்கொள்ள மலேசியா தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இன்று நடைபெற்ற எரிசக்தி ஆணையத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்தரக் கூட்டத்தில் பேசிய அதன் தலைமைச் செயல் அதிகாரி சித்தி சஃபினா சாலே, தற்போதைய நிலையில் நாட்டின் மின்சக்தி அமைப்பு கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருப்பதாகத் தெரிவித்தார்.

மலேசியாவின் மின்சார உற்பத்திக்கான இயற்கை எரிவாயுத் தேவையில் 80 விழுக்காடு உள்நாட்டு மூலங்களிலிருந்தே பெறப்படுவதால், உலகளாவிய விலை உயர்வால் பெரும் பாதிப்பு ஏற்படாது என அவர் விளக்கமளித்தார். 

இருப்பினும், மீதமுள்ள 20 விழுக்காடு எரிவாயு பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், அந்தப் பகுதி மட்டும் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலையேற்றத்திற்கு உள்ளாகும் அபாயம் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய சூழலில் எரிபொருள் செலவினங்களில் பெரிய அளவிலான மாற்றம் இல்லை என்றாலும், சர்வதேச அரசியல் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. 

மின்சார விநியோகத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களால் ஏற்படக்கூடிய நிதிச் சுமைகளைச் சமாளிக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset