செய்திகள் மலேசியா
தன் நாட்டவரையே கொலை செய்ததாக இரண்டு மியான்மர் குடிமக்கள் குற்றம் சாட்டப்பட்டனர்
ஜார்ஜ் டவுன்:
கடந்த மாதம் இங்கு கட் லெபுஹ் மச்சல்லாம் அருகிலுள்ள திறந்தவெளியில் நடந்த சம்பவத்தில் தன் நாட்டவரையே கொலை செய்ததாக இரண்டு மியான்மர் ஆண்கள் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
எனினும், மியாட் தூ கைங், செய்ன் வின் ஆங் ஆகியோருக்கு மலாய் மொழி புரியாததால் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணையின் போது வாசிக்கப்படவில்லை.
எனவே, குற்றச்சாட்டுகளைத் தெளிவாக தெரிவிக்க மியான்மர் மொழி மொழிபெயர்ப்பாளரை நியமிக்க நீதிமன்றம் தேதி நிர்ணயிக்குமாறு துணை அரசு வழக்குரைஞர் சித்தி மரிசா சஃபினா சைஃபுல் அட்லி கோரினார்.
மாஜிஸ்திரேட் துங்கு இந்தான் நாடியா துங்கு முஹம்மத் நஜாரின், மொழிபெயர்ப்பாளர் நியமனத்திற்கு வரும் ஏப்ரல் 23-ஐ நிர்ணயித்தார்.
கடந்த மார்ச் 9-ல், இங்கு கட் லெபுஹ் மச்சல்லாம் அருகே ஒரு ஆண் மண்டையில் கடுமையான காயங்களுடன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. அவர் மழுங்கிய பொருளால் தாக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
அதிகாலை சுமார் 12.05 மணிக்கு அந்தப் பகுதியில் குற்றத் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஜாலான் பட்டானி போலிஸ் நிலைய அதிகாரிகளால் வெளிநாட்டினரான அந்த ஆணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 3:58 pm
ரோன்95, டீசல் குறித்த புதிய கடுமையான விதிகள் இன்று நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன
April 1, 2026, 3:42 pm
மனைவியைக் கொலை செய்ய முயன்றதாக கணவர் குற்றம் சாட்டப்பட்டார்
April 1, 2026, 12:51 pm
எரிபொருள் விலை உயர்வு அபாயம்: மின்சாரத் துறைக்கான அறைகூவல்களை எதிர்கொள்ளத் தயாராகும் மலேசியா
April 1, 2026, 12:22 pm
வெப்ப அலையை எதிர்கொள்ளும் மலேசிய அரசு: 4 மாநிலங்களில் செயற்கை மழை பொழியவைக்கும் அதிரடித் திட்டம்
April 1, 2026, 12:14 pm
மீண்டும் கொழுந்துவிட்டு எரியும் நிலத்தடித் தீ: கிராம மக்கள் கடும் பீதி
April 1, 2026, 11:55 am
மேற்காசிய மோதல்: மலேசியாவின் நிலையை வலுப்படுத்த 3 துறைகளை உலக வங்கி கோடிட்டுக் காட்டுகிறது
April 1, 2026, 11:52 am
மர்மமான முறையில் மாயமான 39 வயதுப் பெண்: தீவிர தேடுதலில் பினாங்கு போலிஸ்
April 1, 2026, 11:10 am
