செய்திகள் உலகம்
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது: பாலி விமான நிலையத்தில் சுற்றி வளைத்த அதிகாரிகள்
டென்பசார்:
சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த ஸ்காட்லாந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பல் தலைவன் ஸ்டீவன் லியோன்ஸ், இந்தோனேசியாவின் பாலி தீவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
45 வயது மதிக்கத்தக்க இவர், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் ஆகிய குற்றங்களுக்காக சர்வதேச காவல்துறையினரால் 'சிவப்பு நோட்டீஸ்' மூலம் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் பாலி வந்திறங்கிய லியோன்ஸ், இங்குள்ள நுரா ராய் சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமான குடிநுழைவுச் சோதனையின் போது சிக்கினார்.
லியோன்ஸ் தலைமையிலான குற்றக் கும்பல் ஸ்காட்லாந்து, ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் தனது சட்டவிரோதச் செயல்களைப் பரப்பியுள்ளதாக இந்தோனேசிய இன்டர்போல் பிரிவின் செயலாளர் உந்துங் வித்யாத்மோகோ தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவரை, இன்று ஐக்கிய இராச்சியத்திற்கு கொண்டு செல்வதாக இந்தோனேசிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், லியோன்ஸுடன் பாலிக்கு வந்த அவரது மற்ற இரு கூட்டாளிகள் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைப் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையை உள்ளூர் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 12:59 pm
வரலாற்றுச் சின்னம்: இப்போது வாழ்வாதார மையம்
April 1, 2026, 12:23 pm
மோதல் மீண்டும் நிகழாது என்ற உத்தரவாதம் வேண்டும்: மஸ்வூத் பெஜேஷ்கியன்
April 1, 2026, 12:07 pm
உலகின் மிக விலையுயர்ந்த பழம்: ஜப்பானின் ஆரஞ்சு தங்கம்
April 1, 2026, 11:03 am
அமெரிக்க மண்ணில் பிறந்தால் இனி குடிமகன் இல்லையா?
April 1, 2026, 10:50 am
ஈராக்கில் பயங்கரம்: விருது பெற்ற அமெரிக்கப் பெண் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் கடத்தல்
March 31, 2026, 3:00 pm
ஹைட்டியில் தொடரும் கும்பல் வன்முறைகள்: 70-க்கும் மேற்பட்டோர் பலி
March 31, 2026, 12:56 pm
இணையக் கட்டுப்பாட்டை மீறிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்தோனேசியா அரசு கடும் எச்சரிக்கை
March 31, 2026, 11:03 am
