செய்திகள் உலகம்
ஈராக்கில் பயங்கரம்: விருது பெற்ற அமெரிக்கப் பெண் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் கடத்தல்
பாக்தாத்:
ஈராக் தலைநகர் பாக்தாத்தில், பல்வேறு விருதுகளை வென்ற அமெரிக்காவின் புகழ்பெற்ற பகுதிநேரப் பத்திரிகையாளர் ஷெல்லி கிட்டில்சன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்று மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் சென்றுகொண்டிருந்த அவரது காரை மறித்த ஆயுதமேந்திய கும்பல், அவரைப் பலவந்தமாக இழுத்துச் சென்றதாக அல்-அரேபியா ஊடகம் வெளியிட்டுள்ள காணொலி உறுதிப்படுத்துகிறது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஈராக் உள்துறை அமைச்சகம், ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளர் கடத்தப்பட்டதை உறுதி செய்துள்ளது. கடத்தல்காரர்களைப் பாதுகாப்புப் படையினர் துரத்திச் சென்றபோது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், கடத்தப்பட்ட பத்திரிகையாளருடன் மற்றொரு வாகனம் பாக்தாத்தின் தெற்குப் பகுதியை நோக்கித் தப்பியோடியுள்ளதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஈராக்கிற்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஷெல்லி கிட்டில்சனுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போர்ச் சூழல் நிலவுவதால் அங்கு கடத்தல் அபாயம் அதிகம் இருப்பதாக அமெரிக்கத் தூதரகம் ஏற்கனவே தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. தற்போது இச்சம்பவம் பிராந்திய மோதல்களுடன் தொடர்புடையதா என்பது குறித்துப் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 12:59 pm
வரலாற்றுச் சின்னம்: இப்போது வாழ்வாதார மையம்
April 1, 2026, 12:23 pm
மோதல் மீண்டும் நிகழாது என்ற உத்தரவாதம் வேண்டும்: மஸ்வூத் பெஜேஷ்கியன்
April 1, 2026, 12:07 pm
உலகின் மிக விலையுயர்ந்த பழம்: ஜப்பானின் ஆரஞ்சு தங்கம்
April 1, 2026, 11:20 am
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது: பாலி விமான நிலையத்தில் சுற்றி வளைத்த அதிகாரிகள்
April 1, 2026, 11:03 am
அமெரிக்க மண்ணில் பிறந்தால் இனி குடிமகன் இல்லையா?
March 31, 2026, 3:00 pm
ஹைட்டியில் தொடரும் கும்பல் வன்முறைகள்: 70-க்கும் மேற்பட்டோர் பலி
March 31, 2026, 12:56 pm
இணையக் கட்டுப்பாட்டை மீறிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்தோனேசியா அரசு கடும் எச்சரிக்கை
March 31, 2026, 11:03 am
