நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரான் - அமெரிக்கப் போர் பதற்றம்: வணிகங்களைக் காக்க 100 கோடி திர்ஹம் ஒதுக்கிய துபாய் அரசு

அபுதாபி:

ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான வான்வழித் தாக்குதல்கள், ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளைச் சமாளிக்க, துபாய் அரசாங்கம் 272 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 100 கோடி திர்ஹம்) மதிப்பிலான பிரம்மாண்ட நிதியுதவித் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் தனிநபர்கள், குடும்பங்கள், வணிக நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதே இத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பிப்ரவரி 28 முதல் அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்களால், வளைகுடா நாடுகளின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. குறிப்பாக, உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும் முக்கிய கடல் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருப்பது, இப்பகுதியின் முதலீடு, வணிகப் பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் எரிசக்தி தட்டுப்பாடு, விலை உயர்வு அச்சம் நிலவினாலும், துபாயின் பொருளாதாரம் 2025-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 6.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

தற்போதைய அசாதாரண சூழ்நிலையிலும் தனது குடிமக்கள், குடியிருப்பாளர்களின் நலனை உறுதிப்படுத்துவதில் துபாய் அரசு உறுதியாக இருப்பதாக அந்நாட்டின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிதியுதவித் திட்டம், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார அதிர்வுகளிலிருந்து துபாயின் வணிகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு நீண்டகாலத் திட்டமிடலாகப் பார்க்கப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset