செய்திகள் மலேசியா
மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் பங்குனி உத்திர விழா: விமரிசையாக நடைபெறுகிறது
மாரான்:
பகாங் மாநிலத்தில் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் பங்குனி உத்திர விழா மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
நாட்டில் புகழ்பெற்ற ஆலயங்களில் மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயமும் ஒன்றாகும்.
இந்த ஆலயத்தில் பங்குனி உத்திர விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும்.
அவ்வகையில் 96ஆவது பங்குனி உத்திர விழா ஆலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
பங்குனி உத்திரம் என்பதால் பக்தர்கள் முன்கூட்டியே ஆலயத்திற்கு வந்து செல்கிறார்கள்.
அவ்வகையில் பக்தர்கள் நேற்று முதல் காவடி, பால்குடம், தொட்டில் காவடி, கரும்பு காவடிகளை ஏந்தி தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர்.
குறிப்பாக லட்சக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தின் பங்குனி உத்திர விழாவில் இரண்டாவது முறையாக கலந்து கொள்கிறேன்
இவ்விழாவை மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த ஆலய நிர்வாகத்திற்கு எனது வாழ்த்துகள்.
மேலும் நாடு முழுவதும் உள்ள கோயில்களுக்கு ஆதரவளிப்பதிலும், சமூகத்திற்குள் மத, கலாச்சார மரபுகளை வலுப்படுத்துவதிலும் மஹிமாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தொடரும் என்று அதன் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 10:25 am
இணையப் பயனர்களின் ரகசியத் தகவல்களைக் குறிவைக்கும் 'ஆக்சியோஸ்' வைரஸ்
April 1, 2026, 10:17 am
பாதையில் மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா LRT சேவைகளில் தாமதம்
April 1, 2026, 10:06 am
குடிபோதையில் வாகனம் ஓட்டிய சந்தேக நபர் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்
April 1, 2026, 9:57 am
வாகன ஓட்டியைத் தாக்கிவிட்டுத் தப்பியோடிய நபருக்கு போலிஸ் வலைவீச்சு
March 31, 2026, 9:55 pm
மஇகாவின் உயர் கல்வி லட்சிய பயணம்; மாணவர்களுக்கு வழிகாட்ட 8 மாநிலங்களில் நடைபெறும்: சதீஸ் குமார்
March 31, 2026, 9:06 pm
குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநர் மோதியதில் குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்: போலிஸ்
March 31, 2026, 9:05 pm
