நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திருக் குர்ஆனை வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்வது எப்படி?: உஸ்தாத் இம்ரான் சேட் விளக்கம்

கோலாலம்பூர்:

திருக் குர்ஆனை வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்வது எப்படி? என்ற அறிவியல் முறை குறித்து உஸ்தாத் இம்ரான் சேட் விளக்கம் அளித்தார். இந்தக் கூட்டத்தை எம்.எம்.யூ.சி மன்றம் நேற்று இரவு கோலாலம்பூர் செய்யது உணவக மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

Learn the Quran word for word எனும் இந்த திட்டத்தை உஸ்தாத் இம்ரான் சேட் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடத்தி வருகிறார். 

இறைவன் உங்களிடம் பேசுவதை உணர்வுப்பூர்வமாக தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவன் பேசும் மொழியை நாம் பொறுமையோடு கற்றுக் கொள்ள வேண்டும். 

உலகாயதத்திற்காக பல்வேறு மொழிகளைக் கற்கும் நாம் நமது மறுமை வாழ்வுக்கு பரிந்து பேசும் திருமறையைக் கற்பதில் என்ன தயக்கம் என்று இம்ரான் கேள்வி எழுப்பினார்.

கடந்த ஒரு மாதமாக ரமலான் மாதம் முழுவதும் தராவீஹ் தொழுதோம். பல்வேறு தொழுகைகளில் ஈடுபட்டோம். ஆனால் அங்கு ஓதப்பட்ட வசனங்கள் நம் இதயத்தைத் தொட்டனவா? அந்த வசனங்கள் நம் உள்ளத்தில் தாக்கத்தை உண்டு பண்ணினவா? சடங்குப்பூர்வமாக நாம் தொழுது முடித்தோம். அதுவே அங்கு ஓதப்பட்டவை குறித்து நாம் அறிந்திருந்தால் நம் மனம் எப்படி இருந்திருக்கும். இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆண்டிலாவது நாம் இறைவசனங்களைப் புரிந்து தொழ வேண்டும். அதற்கான இணையவழி வகுப்பைத் துவங்க எம்.எம். ஒய். சி முன் வந்துள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு உஸ்தாத் இம்ரான் சேட் உரையாற்றினார்.

முன்னதாக எம்.எம்.ஒய்.சி தலைவர் ரிஃபாயி அனைவரையும் வரவேற்றார். ஷேக் ஜியாவுத்தீன் நிகழ்ச்சியை வழி நடத்தினார். MMYC ஆலோசகர் அஸ்ரின் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

- ஃபிதா

​​​​​​

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset