செய்திகள் மலேசியா
மஇகாவின் உயர் கல்வி லட்சிய பயணம்; மாணவர்களுக்கு வழிகாட்ட 8 மாநிலங்களில் நடைபெறும்: சதீஸ் குமார்
கோலாலம்பூர்:
மஇகாவின் உயர் கல்வி லட்சிய பயணம் மாணவர்களுக்கு வழிகாட்ட 8 மாநிலங்களில் நடைபெறவுள்ளது.
மஇகா இளைஞர் பிரிவின் உயர் கல்வி பிரிவுத் தலைவர் சதீஸ் குமார் இதனை கூறினார்.
கடந்த ஆண்டு 4 லட்சம் மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதியுள்ளனர்.
இவ்வாண்டு அதன் முடிவுகள் வெளிடப்பட்ட வேளையில் 14 ஆயிரம் மாணவர் அனைத்து பாடங்களிலும் ஏ பெற்றுள்ளனர்.
ஆகையால் அவர்களின் உயர்கல்வி குறித்த விளக்கத்தை மாணவர்களுக்கு வழங்கவே உயர்க்ல்வி இலட்சியப் பயணம் எனும் வழிக்காட்டி கருத்தரங்கை மஇகா இளைஞர் பிரிவு நாடு முழுவதிலும் நடத்தவுள்ளது.
கடந்த ஆண்டுகளிலும் இந்த உயர்க்கல்வி மாணவர்களுக்கான வழிக்காட்டி கருத்தரங்கு நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டில் மட்டும் நாடு தழுவிய அளவில் 1,500 மாணவர்கள் இதில் கலந்து கொண்டதாகவும் அவர் சொன்னார்.
நாளை ஏப்ரல் 1ஆம் தேதி மலாக்காவிலும் ஏப்ரல் 4ஆம் தேதி பகாங்கிலும் ஏப்ரல் 5ஆம் தேதி கெடா, பேரா, சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம், நெகிரி, ஜொகூர் ஆகிய மாநிலங்களிலும் இந்த வழிக்காட்டி கருத்தரங்கு நடைப்பெறவுள்ளது.
எஸ்பிஎம் முடித்த மாணவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும், எந்த துறையை தேர்ந்தெடுத்தால் சிறப்பாக இருக்கும் என பல விளக்கங்கள் இந்த கருத்தரங்கில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
மேலும் மாணவர்களுக்கு நேருக்கு நேர் (1 to 1) விளக்கமும் அளிக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.
உயர்க்கல்வி பற்றிய விளக்கத்தை போலிடெக்னிக், உயர்க்கல்வி அமைச்சு, போன்றவையை சேர்ந்த அதிகாரிகளால் வழங்கப்படும்.
ஆகையால் இந்த வழிக்காட்டி கருத்தரங்கு தொடர்பில் விவரங்களை பெற 019-4860087 என்ற எண்ணுடன் சத்திஸ்குமாரை தொடர்புக் கொள்ளலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 9:06 pm
குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநர் மோதியதில் குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்: போலிஸ்
March 31, 2026, 9:05 pm
ஊடகவியலாளர் கைது தேவையற்றது: ராம் கர்ப்பால் சிங்
March 31, 2026, 9:04 pm
நகரத்தார் பழக்க வழக்கங்களுக்கான வழிமுறைகள் நூல் வெளியீட்டு விழா: விமரிசையாக நடைபெற்றது
March 31, 2026, 5:36 pm
ஏப்ரல் மாதத்திற்குள் அதிகரிக்கப்பட்ட 300 ரிங்கிட் டீசல் மானியத்தை அரசாங்கம் வழங்கும்
March 31, 2026, 5:16 pm
கே.எல்.சி.சி.யில் 'புகைப்பட புழுக்கள்' என நம்பப்படும் 25 நபர்கள் கைது
March 31, 2026, 4:46 pm
