நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊடகவியலாளர் கைது தேவையற்றது: ராம் கர்ப்பால் சிங்

கோலாலம்பூர்:

அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நேற்று போலிசாரால்  தமிழ் இணையதள ஊடகவியலாளர் காளிதாஸ் சுப்பிரமணியத்தின் கைது தேவையற்றது.

புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் இதனை கூறினார்.

300க்கும் மேற்பட்ட ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் முறையான அனுமதிகள் இல்லாமல் அங்கு பணிபுரிவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைச் செய்தி சேகரிப்பதற்காக, காளிதாஸ் இதற்கு முன்னர் பல ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளுடன் கூலிம் ஹை-டெக் பார்க்கிற்கு சென்றிருந்தார்.

செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்கள் சில இடங்களில் இருப்பது அசாதாரணமானதல்ல.

ஏனெனில் அது அவர்களுக்கு பெரும்பாலும் அவசியமானதாகவும் அவசரமானதாகவும் இருக்கும்.

கூலிம் மாவட்ட காவல் தலைமையகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டபோது காளிதாஸ் தானாக முன்வந்து ஆஜரானார் என்பதும் தெளிவாகிறது.

எனவே, இது அவர் விசாரணைகளுக்கு ஒத்துழைக்காத ஒரு வழக்கு என்று கூற முடியாது.

காளிதாஸ் அந்த நேரத்தில் தனது வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தார்.

அவரைக் கைது செய்வது, தங்கள் கடமைகளைச் செய்யும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதாகத் தெரிகிறது என்றும் தோன்றுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset