செய்திகள் மலேசியா
குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநர் மோதியதில் குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்: போலிஸ்
காஜாங்:
குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநர் மோதியதில் குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.
காஜாங் மாவட்ட போலிஸ் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோப் இதனை கூறினார்.
இன்று அதிகாலை காஜாங்-செமினி செல்லும் சாலையில், ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்த விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டியதைத் தொடர்ந்து, மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை போலிஸ் கைது செய்துள்ளது.
அதிகாலை 1.20 மணிக்கு, 51 வயதான சந்தேக நபர் ஓட்டி வந்த ரேஞ்ச் ரோவர் கார், ஒரு மஸ்டா வேன் ஆகியவை சம்பந்தப்பட்டு இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.
அக்கார் கட்டுப்பாட்டை இழந்து வேனின் பின்புறத்தில் மோதியதில், அந்த வாகனம் சாலையின் இடது புறம் கவிழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்தின் விளைவாக, வேன் ஓட்டுநர், ஏழு முதல் 51 வயதுக்குட்பட்ட ஐந்து பயணிகள் காயமடைந்தனர்.
அவர்களுக்கு காஜாங் மருத்துவமனை, செர்டாங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதே சமயம், கார் ஓட்டுநருக்குக் காயம் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 9:55 pm
மஇகாவின் உயர் கல்வி லட்சிய பயணம்; மாணவர்களுக்கு வழிகாட்ட 8 மாநிலங்களில் நடைபெறும்: சதீஸ் குமார்
March 31, 2026, 9:05 pm
ஊடகவியலாளர் கைது தேவையற்றது: ராம் கர்ப்பால் சிங்
March 31, 2026, 9:04 pm
நகரத்தார் பழக்க வழக்கங்களுக்கான வழிமுறைகள் நூல் வெளியீட்டு விழா: விமரிசையாக நடைபெற்றது
March 31, 2026, 5:36 pm
ஏப்ரல் மாதத்திற்குள் அதிகரிக்கப்பட்ட 300 ரிங்கிட் டீசல் மானியத்தை அரசாங்கம் வழங்கும்
March 31, 2026, 5:16 pm
கே.எல்.சி.சி.யில் 'புகைப்பட புழுக்கள்' என நம்பப்படும் 25 நபர்கள் கைது
March 31, 2026, 4:46 pm
