நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம்; ஒவ்வொருவருக்கும் முன்னேறும் வாய்ப்புகள் இருக்கிறது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

நாடு தழுவிய நிலையில் எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் இன்று வெளிவந்த நிலையில் தேர்வில் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்.

குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும், தேர்ச்சி பெறாதவர்களும் மனம் தளர வேண்டாம். ஒவ்வொருவருக்கும் முன்னேறும் வாய்ப்பு இருக்கிறது.

உங்களுக்கான சரியான பாதையை காட்ட ம.இ.கா எப்போதும் தயாராக உள்ளதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.

ஒரு மாணவனின் வாழ்க்கையில் உயர்கல்வி என்பது மிக முக்கியமான அடித்தளமாகும். அதை சரியான முறையில் திட்டமிட்டு, முழு முயற்சியுடன் மேற்கொள்வது அவசியம்.

இந்திய மாணவர்கள் தங்கள் கல்வி புரட்சியை தொடர வாழ்த்துகிறேன். தொடர்ந்து மாணவர்கள் உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் தங்கள் உயர்கல்வியை தொடர வாழ்த்துகள்.

இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ம.இ.கா என்றும் துணையாக இருக்கிறது.

அந்த வகையில் எம்ஐஇடி மூலம் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு கல்வி உபகார சம்பளம், கல்வி கடனுதவியை வழங்கி வருவதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்திய மாணவர்கள் குறிப்பாக பி40 பிரிவு மாணவர்களுக்கு மஇகா எம்ஐஇடி மூலம் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், டேப் கல்லூரி மற்றும் கூடிய விரைவில் திறக்கப்படவிருக்கும்
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஏய்ம்ஸ்ட் கல்லூரியிலும் உயர்கல்வி படிக்க வாய்ப்பு வழங்கப்படுவதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset