செய்திகள் மலேசியா
எரிபொருள் பயன்பாட்டைச் சேமிக்க வீட்டிலிருந்து பணிபுரியும் திட்டத்தைச் சிலாங்கூர் விரிவாக்குகிறது: அமீருதீன் ஷாரி
ஷா ஆலம்:
கூட்டாட்சி அரசாங்க நிலையில் பரிசீலிக்கப்படுவது போல், எரிபொருள் பயன்பாட்டின் அழுத்தத்தைக் குறைக்க மாநில நிர்வாக நிலையில் வீட்டிலிருந்து பணிபுரியும் திட்டத்தைச் சிலாங்கூர் மாநில அரசாங்கம் விரிவாக்கிக்கொண்டிருக்கிறது.
முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீருதீன் ஷாரி, மேற்காசிய நெருக்கடியால் உலக எண்ணெய் விலை நிலையற்றிருக்கும் நிலையில் இது பணி நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும் ஆற்றல் பயன்பாட்டைச் சேமிக்கவும் உதவும் என்று கூறினார்.
"மாநில மனிதவள பிரிவு அந்த திட்டத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கிறது. தேவைப்பட்டால் நிர்வாகத்திற்கு தெரிவிப்பேன். பணி உற்பத்தித்திறனைப் பராமரிக்கும் அதே நேரத்தில் வாகன எரிபொருள் பயன்பாட்டின் அழுத்தத்தைக் குறைப்பதே முக்கிய நோக்கமாகும்.
"இந்தத் திட்டம் ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்யப்படும். அதன் செயல்படுத்தல் முழுமையாக இருக்காது, மாறாக பணியாளர்களைச் சுமையாக்காமல் இன்று அல்லது எதிர்காலத்தில் ஆற்றல் விநியோகத்தில் அழுத்தம் ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில் நெகிழ்வாக திட்டமிடப்படும்" என்று செவ்வாயன்று இங்கு சுல்தான் சலாஹுதீன் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் உள்ள டேவான் ஜுப்லி பேராக்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
ஆரம்ப திட்டம் மாநில நிர்வாகத்தை மட்டுமே உள்ளடக்கும் என்றும், ஆனால் தனியார் துறை ஆர்வமிருந்தால் விரிவாக்கலாம் என்றும் அமிருதீன் கூறினார்.
"எல்லாமே சுமூகமாக நடந்தால் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் திட்டம் தயாராகும் என்று எதிர்பார்க்கிறோம், மாநில அரசாங்கம் அதன் செயல்படுத்தல் தேதியை அறிவிக்கும்" என்று அவர் கூறினார்.
நேற்று, அவர் சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை குழு (MTES) கூட்டம் 5/2026-க்கு தலைமை தாங்கினார். அதைத் தொடர்ந்து மாலையில் மாநில நிர்வாக குழு (MMKN) கூட்டம் நடைபெற்றது.இவை மேற்காசிய மோதல், அடிப்படை பொருட்கள், எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற நெருக்கடியின் தாக்கத்தைச் சமாளிக்கும் நடவடிக்கைகள் உட்பட தற்போதைய பிரச்சினைகளில் கவனம் செலுத்தியது.
கூட்டத்தில் கூட்டாட்சி அரசாங்கத்தின் பரிந்துரைக்கு இணங்க மாநில நிர்வாக நிலையில் வீட்டிலிருந்து பணிபுரியும் திட்டத்தைச் செயல்படுத்துவது, அணைகளில் நீர் இருப்பை சேமிப்பது, உணவு விநியோக சங்கிலியின் நிலைத்தன்மை போன்று வறட்சி, வெப்ப வானிலையைச் சமாளிக்கும் தயாரிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
வேறு முன்னேற்றங்களில், மக்களின் நலனைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு நிச்சயமற்ற தன்மையையும் சமாளிக்க விநியோக நிலைத்தன்மை, சேவை தொடர்ச்சி, மாநிலத்தின் திறன் உறுதிப்படுத்த தயார்நிலையை மாநில அரசாங்கம் வலுப்படுத்திக்கொண்டிருப்பதாக அமிருதீன் கூறினார்.
"தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கிறது, ஆனால் அது நீடித்தால் தயாராக இருக்க வேண்டும் என்பதால் நாங்கள் சும்மாயிருக்க முடியாது.*
"நாளை காலை தொடர்ச்சியான அமர்வு நடைபெறும், வியாழக்கிழமை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிமுடன் தற்போதைய நிலைமை குறித்த சமீபத்திய தகவல் தொடங்கி சந்திப்புகளில் கலந்துகொள்வேன்" என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 9:55 pm
மஇகாவின் உயர் கல்வி லட்சிய பயணம்; மாணவர்களுக்கு வழிகாட்ட 8 மாநிலங்களில் நடைபெறும்: சதீஸ் குமார்
March 31, 2026, 9:06 pm
குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநர் மோதியதில் குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்: போலிஸ்
March 31, 2026, 9:05 pm
ஊடகவியலாளர் கைது தேவையற்றது: ராம் கர்ப்பால் சிங்
March 31, 2026, 9:04 pm
நகரத்தார் பழக்க வழக்கங்களுக்கான வழிமுறைகள் நூல் வெளியீட்டு விழா: விமரிசையாக நடைபெற்றது
March 31, 2026, 5:36 pm
ஏப்ரல் மாதத்திற்குள் அதிகரிக்கப்பட்ட 300 ரிங்கிட் டீசல் மானியத்தை அரசாங்கம் வழங்கும்
March 31, 2026, 5:16 pm
கே.எல்.சி.சி.யில் 'புகைப்பட புழுக்கள்' என நம்பப்படும் 25 நபர்கள் கைது
March 31, 2026, 4:46 pm
