நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்

புத்ராஜெயா:

2025 ஆம் ஆண்டுக்கான மலேசியக் கல்விச் சான்றிதழ் (எஸ்பிஎம்) தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள 3,350 தேர்வு மையங்களில் 2025 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வில் கலந்துகொள்ள மொத்தம் 413,299 தேர்வர்கள் பதிவு செய்துள்ளதாகக் கல்வியமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

பள்ளி மாணவர்கள், குறிப்பிட்ட தேதியில் காலை 10 மணி முதல் தத்தமது பள்ளிகளில் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

தனியார் தேர்வர்கள், தேர்வு எழுதப் பதிவு செய்துள்ள மாநில கல்வித் துறையைத் தொடர்புகொள்வதன் மூலம் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

முடிவுகளைச் சமர்ப்பிக்கும் பணி திறமையாகவும் ஒழுங்காகவும் நடைபெறுவதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset