செய்திகள் மலேசியா
கெடாவில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு செயலாக்கம் கண்டுபிடிப்பு
கூலிம்:
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) அன்று இங்கு சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு செயலாக்க நடவடிக்கைகள் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஆறு வெளிநாட்டினர் உட்பட ஏழு ஆண்களைப் பொது நடவடிக்கை குழு கைது செய்தது.
வடக்கு பிரிவு கட்டளை அதிகாரி SAC பல்வீர் சிங் மஹிந்தர் சிங், சந்தேகநபர்களில் வளாகத்தின் பராமரிப்பாளராக நம்பப்படும் ஒரு உள்ளூர் ஆண், நான்கு வங்காள தேசிகள், வேலையாட்களாக நம்பப்படும் இரண்டு நேபாள் குடிமக்கள் அடங்குவர் என்று கூறினார்.
கூலிம் சுற்றுச்சூழல் பிரிவுடன் இணைந்து படையணியின் 18-வது பட்டாலியனின் புலனாய்வு கிளை மேற்கொண்ட சோதனை, மாலை சுமார் 3 மணிக்கு நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.
"சம்பந்தப்பட்ட தரப்பிடமிருந்து எந்த அறிவிப்பு அல்லது அனுமதியும் இல்லாமல் பல பிளாஸ்டிக் செயலாக்க வசதிகள் நிறுவி இயக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்தது" என்று செவ்வாயன்று (மார்ச் 31) வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
"சோதனை குழு பெரிய அளவிலான செயலாக்கப்படாத, செயலாக்கப்பட்ட பிளாஸ்டிக் சேமிப்பையும் செயலாக்க நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் பல இயந்திரங்களையும் கண்டுபிடித்தது."
பிளாஸ்டிக் செயலாக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு இயந்திரங்கள், மூன்று ஃபோர்க்லிஃப்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு RM20 மில்லியனுக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட வளாகம் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருவதாகவும், பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து கொண்டுவரப்படுவதாகவும் தெரியவந்தது என்று அவர் மேலும் கூறினார்.
வளாகத்தில் உள்ள வசதிகள் பிளாஸ்டிக் பொருட்களை செயலாக்க பயன்படுத்தப்பட்டன. செயலாக்கப்பட்ட பிளாஸ்டிக்குகள் பின்னர் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
35 வயது உள்ளூர் ஆண் சட்டவிரோத குடியேறியோரை வேலைக்கு அமர்த்தியதற்காக குடியேற்ற சட்டம் 1959/63-ன் பிரிவு 55B-ன் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.
22 முதல் 46 வயதுக்கு இடையிலான ஆறு வங்காள தேசம், நேபாள் ஆண்கள் குடியேற்ற ஒழுங்குமுறைகள் 1963-ன் விதி 39(b)-ன் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.
"பிளாஸ்டிக் செயலாக்க நடவடிக்கைகளின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கை சமர்பிக்கத் தவறியதற்காக சுற்றுச்சூழல் தரம் சட்டம் 1974-ன் பிரிவு 34A-ன் கீழ் விசாரணை நடத்த வழக்கு கூலிம் சுற்றுச்சூழல் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 11:33 am
சாரா வழக்கு விசாரணை குழந்தை சாட்சியுடன் மீண்டும் தொடங்கியது
March 31, 2026, 11:03 am
'திறந்த மனதுடன் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்': துணைப் பிரதமர்
March 31, 2026, 10:17 am
சுங்கை பெசியில் பரபரப்பு: மாயமான மாற்றுத்திறனாளி இளைஞர் நலமுடன் மீட்பு
March 31, 2026, 10:14 am
மலேசிய வாகனங்களில் எரிபொருள் திருட்டா?: தாய்லாந்து சுற்றுலாத்துறை விளக்கம்
March 31, 2026, 10:01 am
கூலிமில் ஊடகவியலாளர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது: சார்லஸ்
March 31, 2026, 9:53 am
31 குற்றப் பதிவுகளை கொண்ட ஆடவர் கேஎல்ஐஏவில் துரத்தி பிடிக்கப்பட்டார்: போலிஸ்
March 31, 2026, 9:36 am
