செய்திகள் மலேசியா
'திறந்த மனதுடன் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்': துணைப் பிரதமர்
கோலாலம்பூர்:
2025 எஸ்.பி.எம். தேர்வு எழுதிய 4,13,299 மாணவர்களைத் திறந்த மனதுடன் தங்கள் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுமாறு துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹாமிடி வலியுறுத்தினார்.
செவ்வாயன்று (மார்ச் 31) தமது சமூக ஊடக பதிவில் அஹ்ம்மத் ஜாஹிட், இந்த முடிவுகள் ஒவ்வொரு இளைஞரின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் மிக நீண்ட பயணத்தின் தொடக்கமாகும் என்று கூறினார்.
மேலும், தங்களுக்கு முதுகெலும்பாக இருந்தவர்களின் பங்களிப்பையும் தியாகங்களையும் மறந்துவிடாமலிருக்குமாறும் அவர் மாணவர்களுக்கு நினைவுபடுத்தினார்.
"தொடர்ந்து உங்களை ஆதரித்து வழிநடத்திய பெற்றோர்கள், பாதுகாவலர்கள், குடும்பத்தினர், ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்க மறந்துவிடாதீர்கள். இன்று நீங்கள் அடைந்த வெற்றி அவர்களின் பிரார்த்தனைகள், தியாகங்களின் விளைவும் ஆகும்" என்று அவர் கூறினார்.
SPM தேர்வு முடித்த மாணவர்கள் அடுத்த கட்டங்களில் விவேகமான முடிவுகளை எடுக்குமாறும், தொழில்நுட்பம், தொழிற்கல்வி பயிற்சியைச் (TVET) சாத்தியமான தொழில் வழியாக ஆராய்யுமாறும் அஹ்ம்மத் ஜாஹிட் வலியுறுத்தினார்.
"தொடர்ந்து முன்னேறுங்கள். உங்கள் பாதையை விவேகமாக தேர்ந்தெடுங்கள். இன்ஷா அல்லா, திவேட் எப்போதும் உங்கள் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப உங்களுக்கு வாய்ப்புகளை வழங்கும்" என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையே, கல்வி அமைச்சர் ஃபாத்லினா சீடெக், அதே நாளில் தனது சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட வீடியோவில், அனைத்து 2025 SPM மாணவர்களையும் வாழ்த்தியதோடு, அவர்களின் சாதனை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பரந்த பாதையின் தொடக்கமாகும் என்று தெரிவித்தார்.
"ஊக்கமாக இருங்கள், உயர்நிலை அறிவை நாடி தொடர்ந்து முயற்சிசெய்து உங்கள் கனவுகளை அடையுங்கள்.
"தொடக்கப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை அர்பணிப்பு, பொறுமை, உறுதிப்பாட்டுடன் நம் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் என் மிக உயர்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறேன்" என்று 43 வினாடி வீடியோவில் அவர் கூறினார்.
நாடு முழுவதும் மொத்தம் 4,13,299 மாணவர்கள் இன்று தங்கள் 2025 SPM தேர்வு முடிவுகளைப் பெற்றனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 12:10 pm
கெடாவில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு செயலாக்கம் கண்டுபிடிப்பு
March 31, 2026, 11:33 am
சாரா வழக்கு விசாரணை குழந்தை சாட்சியுடன் மீண்டும் தொடங்கியது
March 31, 2026, 10:17 am
சுங்கை பெசியில் பரபரப்பு: மாயமான மாற்றுத்திறனாளி இளைஞர் நலமுடன் மீட்பு
March 31, 2026, 10:14 am
மலேசிய வாகனங்களில் எரிபொருள் திருட்டா?: தாய்லாந்து சுற்றுலாத்துறை விளக்கம்
March 31, 2026, 10:01 am
கூலிமில் ஊடகவியலாளர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது: சார்லஸ்
March 31, 2026, 9:53 am
31 குற்றப் பதிவுகளை கொண்ட ஆடவர் கேஎல்ஐஏவில் துரத்தி பிடிக்கப்பட்டார்: போலிஸ்
March 31, 2026, 9:36 am
