நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

31 குற்றப் பதிவுகளை கொண்ட ஆடவர் கேஎல்ஐஏவில் துரத்தி பிடிக்கப்பட்டார்: போலிஸ்

சிப்பாங்:

கிட்டத்தட்ட 31 குற்றப் பதிவுகளை கொண்ட ஆடவர் கேஎல்ஐஏ விமான நிலையத்தில் துரத்திச் சென்று பிடிக்கப்பட்டார்.

கேஎல்ஐஏ மாவட்ட போலிஸ் தலைவர் ஏசிபி எம். ரவி இதனை தெரிவித்தார்.

நேற்று மாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஒரு நபர் ஓட்டிச் சென்ற ஹோண்டா சிவிக் காரை போலிசார் துரத்தி சென்றனர்.

இச் சம்பவத்தில் 31 குற்றப் பதிவுகள் கொண்ட உள்ளூர் நபர் ஒருவரை போலிசார் கைது செய்தனர்.

மாலை 4.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், ஒரு போலிஸ் ரோந்து வாகனம் துரத்தியபோது தப்பிப்பதற்காக, 30 வயதான அந்த சந்தேக நபர் பல பொது வாகனங்கள் மீது மோதியதாக அவர் கூறினார்.

கேஎல்ஐஏவைச் சுற்றியுள்ள குற்றத் தடுப்புப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், ஒரு சிவப்பு நிற ஹோண்டா சிவிக் வாகனத்தை நிறுத்த முயன்றனர்.

ஆனால் அதன் ஓட்டுநர் சோதனைக்காக நிறுத்த மறுத்துவிட்டார்.

அந்த வாகனத்தின் ஓட்டுநர் கேஎல்ஐஏ  3ஆவது மாடி முனையப் பாதையை நோக்கித் தப்பிச் செல்ல முயன்றபோது, ​​வழியில் இருந்த ஐந்து பொது வாகனங்கள் மீது மோதிவிட்டு, சம்பவ இடத்திற்கு அருகே கைது செய்யப்பட்டார்.

சோதனையின் முடிவுகளில், அந்த நபருக்கு இதற்கு முன்பு 31 குற்றப் பதிவுகளும், போதைப்பொருள் தொடர்பான ஒரு பதிவும் இருப்பது தெரியவந்தது.

அந்தப் பதிவை போலிஸ் இன்னும் தேடி வருகிறது என்றும் ரவி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset