செய்திகள் மலேசியா
சுங்கை பெசியில் பரபரப்பு: மாயமான மாற்றுத்திறனாளி இளைஞர் நலமுடன் மீட்பு
கோலாலம்பூர்:
கோலாலம்பூர், புக்கிட் மேவா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 22 வயதுடைய அல் பரா மோனிர் சோபி அல்கத்ரா என்ற பாலஸ்தீன இளைஞர், கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தார்.
சிறுவயது முதலே மூளை முடக்குவாத (Cerebral Palsy) பாதிப்புடைய இந்த மாற்றுத்திறனாளி இளைஞரின் மாயம் குறித்து, மார்ச் 24-ஆம் தேதி காஜாங் மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தீவிரத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர், இன்று அதிகாலை 4 மணியளவில் சுங்கை பெசி (Sungai Besi) நகர்ப்பகுதியில் அந்த இளைஞரைப் பத்திரமாக மீட்டனர். அவர் எவ்விதக் காயமுமின்றி நலமுடன் இருப்பதாகக் காஜாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசுஃப் உறுதிப்படுத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ள இந்த இளைஞரின் தேடுதல் பணிக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துத் தரப்பினருக்கும் காவல்துறை தனது நன்றியினைத் தெரிவித்துள்ளது. தற்போது அந்த இளைஞர் தனது குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் செய்தி குறித்த மேலதிகத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பாலஸ்தீன இளைஞரின் மீட்பு அவரது உறவினர்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 12:10 pm
கெடாவில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு செயலாக்கம் கண்டுபிடிப்பு
March 31, 2026, 11:33 am
சாரா வழக்கு விசாரணை குழந்தை சாட்சியுடன் மீண்டும் தொடங்கியது
March 31, 2026, 11:03 am
'திறந்த மனதுடன் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்': துணைப் பிரதமர்
March 31, 2026, 10:14 am
மலேசிய வாகனங்களில் எரிபொருள் திருட்டா?: தாய்லாந்து சுற்றுலாத்துறை விளக்கம்
March 31, 2026, 10:01 am
கூலிமில் ஊடகவியலாளர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது: சார்லஸ்
March 31, 2026, 9:53 am
31 குற்றப் பதிவுகளை கொண்ட ஆடவர் கேஎல்ஐஏவில் துரத்தி பிடிக்கப்பட்டார்: போலிஸ்
March 31, 2026, 9:36 am
