செய்திகள் உலகம்
ஈரான் போரில் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க ராணுவ சொத்துகள் சேதம்: பென்டகன் அதிகாரி தகவல்
வாஷிங்டன்:
ஈரானின் ஏவுகணை, டிரோன் தாக்குதல்களால் அமெரிக்காவின் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் உடனான மோதல் தொடங்கிய முதல் மூன்று வாரங்களில் மட்டும் அமெரிக்காவிற்கு சுமார் 1.4 பில்லியன் டாலர் முதல் 2.9 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதனை பென்டகன் முன்னாள் பட்ஜெட் அதிகாரி எலைன் மெக்கஸ்கர் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவின் அதிநவீன எஃப்-35 ரக போர் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்து அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மேலும், குவைத்தில் மூன்று எஃப்-15இ ரக விமானங்கள் சுடப்பட்டு விழுந்து நொறுங்கின.
ஈராக் வான்பரப்பில் இரண்டு எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மோதிக்கொண்டதில் ஆறு வீரர்கள் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஐந்து கேசி-135 ரக விமானங்கள் சேதமடைந்து தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன.
இது தவிர, சுமார் 12-க்கும் மேற்பட்ட அதிநவீன ‘எம்.கியூ-9 ரீப்பர்' வகை ஆளில்லா உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. சவுதி அரேபியா, கத்தார், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களில் வைக்கப்பட்டுள்ள ரேடார் அமைப்புகளும் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 7:17 pm
வளைகுடா போர் எதிரொலி: விளக்குளை அணைக்கும்படி வங்காளதேச அரசாங்கம் உத்தரவு
March 30, 2026, 4:55 pm
தூசி படிந்த அறைகளும் தற்காலிக பதுங்கு குழிகளும்: அழுத்தத்தில் வாழும் இஸ்ரேல் மக்கள்
March 30, 2026, 4:24 pm
மேற்காசிய நெருக்கடி: மூன்று மாதங்களுக்கு எரிபொருள் வரியைப் பாதியாக குறைக்கிறது ஆஸ்திரேலியா
March 30, 2026, 11:59 am
பொருளாதார நெருக்கடி: இலவச உணவுத் திட்டத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்கிறது இந்தோனேசியா
March 30, 2026, 11:01 am
மரணத்திற்குப் பின்னும் தொடரும் வன்முறை: 29 வயது இளம் தொழிலதிபரின் தலை மாயமானதால் அதிர்ச்சி
March 30, 2026, 10:59 am
ஈரானின் எண்ணெய் மையத்தை கைப்பற்றுவதை 'விரும்புவதாக' டிரம்ப் வெளிப்படுத்தினார்
March 29, 2026, 11:28 am
பெற்ற பிள்ளைகளை குளிர்சாதன பெட்டியில் பூட்டி வைத்த தாய்: 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்
March 29, 2026, 10:30 am
"உங்களுக்குப் பொருட்கள் கிடையாது": இஸ்ரேலியப் பயணியைப் புறக்கணித்த கம்போடியக் கடை ஊழியர்
March 29, 2026, 10:03 am
