நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆயிரக்கணக்கான அமெரிக்க வான்படை வீரர்கள் மேற்காசியா வர தொடங்கினர்

வாஷிங்டன்: 

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிரான யுத்தத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை ஆலோசிக்கும் நிலையில், அமெரிக்க நிலப்படையின் வான்படை பிரிவிலிருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் மேற்காசியா வரத் தொடங்கியதாக அமெரிக்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.

மார்ச் 18-ல் ராய்ட்டர்ஸ் முன்பே தெரிவித்தபடி, இரானிய பிரதேசத்தில் படை நிறுத்துவது உட்பட விருப்பங்களை விரிவாக்கக்கூடிய மேலும் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களை மேற்காசியா அனுப்புவதை டிரம்ப் நிர்வாகம் கருத்தில் கொண்டு வந்தது.

வட கரோலைனாவின் ஃபோர்ட் பிராக்கை தளமாகக்கொண்ட வான்குடை வீரர்கள் படை அலகு, ஏற்கனவே அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான கடற்படை, கடற்படை கார்ப்ஸ், சிறப்பு நடவடிக்கை படை வீரர்களுடன் சேருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வார இறுதியில் சுமார் 2,500 கடற்படை வீரர்கள் மேற்காசியா வந்தடைந்தனர். அடையாளம் தெரிவிக்கப்படாத அந்த அதிகாரி, படை நிறுத்தத்தின் குறிப்பிட்ட இடத்தை வெளிப்படுத்தவில்லை, ஆனால் இந்த நடவடிக்கை ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

ஈரானுக்குப் படை அனுப்ப எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும், இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் சாத்தியமான நடவடிக்கைகளுக்கான திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் உள்ளது என்று ஆதாரங்கள் கூறின.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தைக் கையாளும் கார்க் தீவைக் கைப்பற்ற முயற்சிப்பது உட்பட, இந்த வீரர்கள் ஈரான் மோதலில் பல நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், டிரம்ப் நிர்வாகத்தில் அந்த தீவைக் கைப்பற்றும் நடவடிக்கை குறித்த கலந்தாலோசனைகள் நடைபெற்றதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

ஈரான் ஏவுகணைகள், டிரோன்களால் அந்தத் தீவைத் தாக்கும் திறன் கொண்டிருப்பதால் இந்த நடவடிக்கை அதிக அபாயம் கொண்டது என்று கருதப்படுகிறது.

அதிக அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்ற ஈரான் உள்ளே நிலப்படையைப் பயன்படுத்துவதற்கான சாத்தியத்தையும் நிர்வாகம் விவாதித்ததாக ராய்ட்டர்ஸ் முன்பே தெரிவித்தது. ஆனால் தரைக்கு ஆழமாக உள்ள பொருட்களைப் பெறுவதற்கு அமெரிக்க படைகள் ஈரான் பிரதேசத்தில் நீண்ட காலம் இருக்க வேண்டி வரலாம் என்ற ஆபத்தும் உள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் டேங்கர் கப்பல்களுக்குப் பாதுகாப்பான நகர்வு உறுதிப்படுத்த ஈரான் கடலோரத்தில் படை நிறுத்துவதற்கான சாத்தியத்தையும் டிரம்ப் நிர்வாகத்தின் உள் கலந்தாலோசனைகளில் விவாதிக்கப்பட்டது.

அந்த நோக்கம் முதன்மையாக வான், கடற்படை வலிமை மூலம் அடையப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஈரான் கடலோரத்தில் படை நிறுத்தலும் சாத்தியமாகும்.

டிரம்ப் ஈரானில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர "மிகவும் நியாயமான ஆட்சியுடன்" கலந்தாலோசிப்பதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் அல்லது எண்ணெய் கிணறுகள், மின்நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலை எதிர்கொள்வதாகவும் தெஹ்ரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.

தீர்மானிக்கப்பட்ட நோக்கங்களுக்கு மட்டுமே என்றாலும் அமெரிக்க நிலப்படையின் எந்தவொரு பயன்பாடும், ஈரான் இயக்கத்திற்கு குறைவான அமெரிக்க பொதுமக்கள் ஆதரவு, மேற்காசியாவில் புதிய மோதல்களில் அமெரிக்கா சிக்கிக்கொள்வதைத் தவிர்க்கும் தேர்தல் முன் வாக்குறுதியால் டிரம்புக்கு பெரும் அரசியல் அபாயத்தை ஏற்படுத்தலாம்.

பிப்ரவரி 28-ல் நடவடிக்கை தொடங்கியதிலிருந்து அமெரிக்கா 11,000-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளது. ஆபரேஷன் எபிக் ஃபியூரியில் 300-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயமடைந்து 13 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset