செய்திகள் உலகம்
வளைகுடா போர் எதிரொலி: விளக்குளை அணைக்கும்படி வங்காளதேச அரசாங்கம் உத்தரவு
டாக்கா:
ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேல் தாக்குதல் போரால் உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. அதில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்று பங்களாதேஷ். ஒரு காலத்தில் வங்காளதேசம் தெற்காசியாவின் இரண்டாவது ஆகப்பெரிய பொருளாதார மண்டலமாக இருந்தது.
வங்காளதேச அரசாங்கம் எரிசக்தியை மிச்சப்படுத்த விளக்குகளை அடைக்கும்படியும் குளிர்சாதனத்தைக் குறைவாகப் பயன்படுத்தும்படியும் அரசு ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தேவைப்படும்போது மட்டும்தான் மின் விளக்குகள், குளிர்சாதனம், மின்விசிறி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அதற்குத் தேவைப்படும் எண்ணெய், எரிவாயு ஆகியவற்றில் 95 விழுக்காட்டை இறக்குமதி செய்கிறது. எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க பங்களாதேஷ் சுமார் 2 பில்லியன் டாலர் கடனைப் பெற விரும்புகிறது.
எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவங்காளதேச அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கைகள எடுத்திருக்கிறது. பெட்ரோல், டீசலை வாங்க வரம்பு விதித்திருக்கிறது. உரம் தயாரிப்பதை நிறுத்தியிருக்கிறது. மேலும் பெட்ரோல் நிலையங்களைக் கண்காணிக்கக் காவல்துறை அதிகாரிகளை அனுப்பியிருக்கிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 4:55 pm
தூசி படிந்த அறைகளும் தற்காலிக பதுங்கு குழிகளும்: அழுத்தத்தில் வாழும் இஸ்ரேல் மக்கள்
March 30, 2026, 4:24 pm
மேற்காசிய நெருக்கடி: மூன்று மாதங்களுக்கு எரிபொருள் வரியைப் பாதியாக குறைக்கிறது ஆஸ்திரேலியா
March 30, 2026, 11:59 am
பொருளாதார நெருக்கடி: இலவச உணவுத் திட்டத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்கிறது இந்தோனேசியா
March 30, 2026, 11:01 am
மரணத்திற்குப் பின்னும் தொடரும் வன்முறை: 29 வயது இளம் தொழிலதிபரின் தலை மாயமானதால் அதிர்ச்சி
March 30, 2026, 10:59 am
ஈரானின் எண்ணெய் மையத்தை கைப்பற்றுவதை 'விரும்புவதாக' டிரம்ப் வெளிப்படுத்தினார்
March 29, 2026, 11:28 am
பெற்ற பிள்ளைகளை குளிர்சாதன பெட்டியில் பூட்டி வைத்த தாய்: 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்
March 29, 2026, 10:30 am
"உங்களுக்குப் பொருட்கள் கிடையாது": இஸ்ரேலியப் பயணியைப் புறக்கணித்த கம்போடியக் கடை ஊழியர்
March 29, 2026, 10:03 am
