செய்திகள் உலகம்
தூசி படிந்த அறைகளும் தற்காலிக பதுங்கு குழிகளும்: அழுத்தத்தில் வாழும் இஸ்ரேல் மக்கள்
டெல் அவீவ்:
தொடர்ந்த மோதல் சூழ்நிலையில் இஸ்ரேலில் மில்லியன் கணக்கான மக்கள் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலால் பதுங்குக்குழிகளுக்கும் பொது தங்குமிடங்களுக்கும் விரைந்து செல்வது, அவர்களின் நாளுக்கு நாள் மேலும் சவாலாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் நாங்கள் செத்துப்.பிழைக்கிறோம் என்று அந்த மக்கள் வேதனைப்படுகிறார்கள்.
அடிக்கடி ஒலிக்கும் வான்தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் மக்களைத் தினசரி நடவடிக்கைகளை விட்டுவிட்டு உடனடியாக பாதுகாப்பைத் தேடி ஓடி ஒளிய வற்புறுத்துகின்றன.
மக்களுக்குத் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள குறுகிய நேரம் கிடைக்கிறது என்று தாக்குதலுக்குச் சில நிமிடங்கள் முன்பே கைபேசிகளிலும் அவசர எச்சரிக்கைகளைக் கொடுக்கின்றன.
பதுங்குக்குழிகள் சில அடிப்படை வசதிகளுடன் கூடியவையாக இருக்கும் நிலையில், குறிப்பாக பழைய அல்லது முன்பு அரிதாக பயன்படுத்தப்பட்ட பகுதிகளில் குறுகிய, தூசு நிறைந்த, குறைந்த வசதி கொண்டவை அவை என்று இஸ்ரேலியர்கள் கூறுகின்றனர்.
தனியார் இல்லங்களில் பாதுகாப்பு அறைகள், கட்டிடங்களில் பகிரப்பட்ட தங்குமிடங்கள், பொது வளாகங்களில் சிறப்பு பதுங்குக்குழிகள் நாட்டில் மூன்று வகையான முக்கிய தங்குமிடங்களாக உள்ளன. இவை அனைத்தும் பொது பாதுகாப்பு அதிகாரிகள் நிர்ணயித்த பாதுகாப்பு தரங்களைப் பின்பற்ற வேண்டும்.
எனினும், தொடர்ந்து தாக்குதல் அச்சுறுத்தலின் நிழலில் வாழ்வது மக்களின் உணர்வுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பதுங்குக்குழிகளுக்குச் செல்வதும் அன்றாட வாழ்க்கையின் நிலையற்ற தன்மையும் சோர்வை ஏற்படுத்துவதாக பலர் ஒப்புக்கொள்கிறார்கள்.
பாதுகாப்பு அமைப்பை துளைத்துக்கொண்டு வரும் ஏவுகணைகள் சேதங்களையும் காயங்களையும் ஏற்படுத்துவதால் பொதுமக்களிடையே கவலைகள் அதிகரித்துள்ளன.
இராணுவ நடவடிக்கைகள் குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பெரும்பாலான மக்கள் மோதல் விரைவில் முடிவடைய வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவிக்கிறார்கள், ஆனால் அமைதிக்கான பாதை இன்னும் தெளிவாகவில்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள்.
இந்த நிலைமை பொதுமக்கள் சந்திக்கும் தொடர்ந்த அழுத்தத்தைப் பிரதிபலிக்கிறது. அன்றாட வாழ்க்கை விரைவில் தணிவதற்கான அறிகுறிகளைக் காட்டாத யுத்த யதார்த்தத்திற்கு ஏற்ப மக்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அழுத்தமான நிலையில், சில சமூகங்கள் இந்தச் சூழ்நிலையுடன் தகவமைத்துக்கொள்ள முயற்சிக்கின்றன. சில பதுங்குக்குழிகள் அண்டை வீட்டார் சந்திக்கும் இடங்களாக மாறியுள்ளன, அழுத்தத்தைக் குறைக்க சிறிய பொழுதுபோக்கு, கொண்டாட்டங்களும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தேவையில்லாமல் வலிய சென்று ஈரானைத் தாக்கியதன் விளைவை நாங்கள் அனுபவிக்கிறோம் என்று அவர்கள் கண்ணீர் மல்கக் கூறுகின்றார்கள்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 7:17 pm
வளைகுடா போர் எதிரொலி: விளக்குளை அணைக்கும்படி வங்காளதேச அரசாங்கம் உத்தரவு
March 30, 2026, 4:24 pm
மேற்காசிய நெருக்கடி: மூன்று மாதங்களுக்கு எரிபொருள் வரியைப் பாதியாக குறைக்கிறது ஆஸ்திரேலியா
March 30, 2026, 11:59 am
பொருளாதார நெருக்கடி: இலவச உணவுத் திட்டத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்கிறது இந்தோனேசியா
March 30, 2026, 11:01 am
மரணத்திற்குப் பின்னும் தொடரும் வன்முறை: 29 வயது இளம் தொழிலதிபரின் தலை மாயமானதால் அதிர்ச்சி
March 30, 2026, 10:59 am
ஈரானின் எண்ணெய் மையத்தை கைப்பற்றுவதை 'விரும்புவதாக' டிரம்ப் வெளிப்படுத்தினார்
March 29, 2026, 11:28 am
பெற்ற பிள்ளைகளை குளிர்சாதன பெட்டியில் பூட்டி வைத்த தாய்: 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்
March 29, 2026, 10:30 am
"உங்களுக்குப் பொருட்கள் கிடையாது": இஸ்ரேலியப் பயணியைப் புறக்கணித்த கம்போடியக் கடை ஊழியர்
March 29, 2026, 10:03 am
