நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மேற்காசிய நெருக்கடி: மூன்று மாதங்களுக்கு எரிபொருள் வரியைப் பாதியாக குறைக்கிறது ஆஸ்திரேலியா

சிட்னி: 

மேற்காசிய யுத்தத்தால் பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட நுகர்வோரின் சுமையைக் குறைக்க மூன்று மாதங்களுக்கு எரிபொருள் வரியைப் பாதியாக குறைக்கும் என்று ஆஸ்திரேலியா அறிவித்தது.

பிரதமர் அன்தோனி அல்பனீஸ், எரிபொருள் விநியோக பற்றாக்குறையைச் சமாளிக்கும் திட்டத்தை ஒப்புக்கொண்ட மாநில, பிரதேச தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டதாக கூறினார்.

ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் 52 சென்ட் விற்பனை வரி விதிக்கும் ஆஸ்திரேலியா, அந்தக் காலகட்டத்தில் அதை பாதியாக குறைக்கும் என்று அவர் அறிவித்தார்.

"இந்த நடவடிக்கையின் செலவு AS$1.75 பில்லியன் (RM7.04 பில்லியன்) என்று அரசாங்கம் மதிப்பிடுகிறது. ஆஸ்திரேலிய மக்கள் எதிர்கொள்ளும் பெரும் அழுத்தத்தைப் புரிந்துகொள்வதால் இன்று எரிபொருள் விலையைக் குறைக்கிறோம்" என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், ஆஸ்திரேலியாவிற்கு எரிபொருள் விநியோகம் இன்னும் சீராக நடைபெறுவதாகவும், கிராமப்புற பகுதிகளில் பெட்ரோல் பற்றாக்குறை பீதி கொள்முதல், விநியோக பிரச்சினைகளால் ஏற்பட்டதாகவும் அரசாங்கம் உறுதியளித்தது.

விக்டோரியா, டாஸ்மேனியா இலவச பொதுப் போக்குவரத்தை வழங்கும் நிலையில், கேன்பராவில் செய்தியாளர்களிடம் பேசும் போது அல்பனீஸ் மக்களைப் பெட்ரோலைச் சேமிக்க வாகன பயன்பாட்டைக் குறைக்குமாறும் வலியுறுத்தினார்.

"நகரங்களில் குறைந்த எரிபொருள் பயன்படுத்தினால், அழுத்தத்தைச் சந்திக்கும் கிராமப்புற பகுதிகளுக்கு அதிகமாக திருப்பி விட முடியும்" என்று அவர் கூறினார்.

நியூ சவுத் வேல்ஸில், முதலமைச்சர் கிரிஸ் மின்ஸ், பல பெட்ரோல் நிலையங்களில் விநியோகம் தீர்ந்துவிட்டதாகவும், கிராமப்புற பகுதிகளுக்கு உதவுவதில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

"நிலைமை மோசமடைந்தால் கூடுதல் நடவடிக்கைகள் எடுப்போம்" என்று அவர் கூறினார்.

எரிபொருள் விநியோகத்தை அதிகரிக்க எரிபொருள் டேங்கர் கப்பல்கள் கொள்முதலை உறுதிப்படுத்துவதற்கான அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்கும் மசோதாவையும் நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தியது.

வாராந்திர தரவு, ஆஸ்திரேலியாவின் பெட்ரோல் விநியோகம் 39 நாட்களுக்குப் போதுமானது என்றும், இது முந்தைய வாரத்திலிருந்து சிறிது உயர்ந்துள்ளது என்றும், டீசல் விநியோகம் 30 நாட்களுக்குப் போதுமானது என்றும் காட்டுகிறது.

கனரக வாகனங்களுக்கான சாலை பயன்பாட்டு கட்டணத்தைக் குறைப்பதன் மூலம் லாரி செலவுகளையும் அரசாங்கம் குறைக்கும்.

எரிபொருள் சோதனையின் கண்காணிப்பின்படி, நியூ சவுத் வேல்ஸில் சராசரி பெட்ரோல் விலை பிப்ரவரியில் AU$1.82 (RM5.02)-லிருந்து நேற்று AU$2.48 (RM6.85)-ஆக உயர்ந்துள்ளது, டீசல் விலை AU$3 (RM8.28)-ஐ தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset