செய்திகள் வணிகம்
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
மும்பை:
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கடும் சரிவைச் சந்தித்தது. ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் ஐந்தாவது வாரமாக நீடிப்பதன் விளைவாக, உலக அளவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது.
இதன் எதிரொலியாக, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 1,635 புள்ளிகள் (2.22%) சரிந்து 71,947.55-ல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 488 புள்ளிகள் (2.14%) வீழ்ச்சியடைந்து 22,331.40-ல் முடிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.422 லட்சம் கோடியில் இருந்து ரூ.412.4 லட்சம் கோடியாகக் குறைந்தது. இதன் மூலம், முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
இதனிடையே, அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 95-க்கும் அதிகமாக சரிந்தது.
ஒரு கட்டத்தில் ரூபாய் மதிப்பு 95.20-ஆக வீழ்ச்சியடைந்தது. வங்கிகளின் அந்நியச் செலாவணி கையிருப்பு நிலவரங்களை ரிசர்வ் வங்கி முறைப்படுத்திய போதிலும், ரூபாயின் சரிவைத் தடுக்க இயலவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
